மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

தேசிய விருது இயக்குநரைப் படத்திலிருந்து நீக்கிய விஜய் ஆண்டனி

தேசிய விருது இயக்குநரைப் படத்திலிருந்து நீக்கிய விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி, தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானாலும் தற்போது நடிப்பில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் உள்ளிட்ட படங்கள் விஜய் ஆண்டனிக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்தன. அடுத்ததாக இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் வர உள்ளன. இதனிடையே பிச்சைக்காரன்-2 பட வேலைகளிலும் மும்முரம் காட்டி வருகிறார்.

பிச்சைக்காரன் படம் வெளியாகி சரியாக ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. அண்மையில் ‘5 years of pichaikaran’ என்றெல்லாம் விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைப் பார்க்க முடிந்தது. 2016ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம், தனித்துவமான கதைக்களத்தால் சினிமா ரசிகர்களிடம் அப்ளாஸ் அள்ளியது. இந்தத் திரைப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருந்தார். தற்போது பிச்சைக்காரன் படத்தின் அடுத்த பாகத்திற்கான கதையை விஜய் ஆண்டனியே எழுதியுள்ளார்.

முன்னதாக, பிச்சைக்காரன்-2 படத்தை இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ப்ரியா கிருஷ்ணசாமி பாரம் படத்துக்காக தேசிய விருது வாங்கியவர். ஆனால், சமீபத்தில் நடந்த கோடியில் ஒருவன் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி பேசுகையில், "கோடியில் ஒருவன் திரைப்பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் சிறப்பாக இப்படத்தைப் இயக்கியுள்ளார். அதனால் என் பிச்சைக்காரன்-2 படத்துக்கும் இவரையே இயக்குநராகத் தேர்வு செய்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது? தேசிய விருது பெற்ற இயக்குநரை திடீரென மாற்ற என்ன காரணம் என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

வியாழன் 11 மா 2021