மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 மா 2021

‘விஜய் 65’ : பூஜா ஹெக்டே கொடுத்த கால்ஷீட் !

‘விஜய் 65’ : பூஜா ஹெக்டே கொடுத்த கால்ஷீட் !

விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி, விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க படம் பெரிய ஹிட். அனிருத் படத்துக்கு இசையமைத்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இளம் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிவரும் விஜய்யின் அடுத்த தேர்வு நெல்சன். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மாஸ்டரைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். தெலுங்கில் பிஸியாக இருப்பதால் முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில், பூஜா நடிப்பது உறுதியாகியிருப்பதாகவே தெரிகிறது. அதோடு, விஜய் 65 படப்பிடிப்புக்காக 50 நாட்கள் தேதி ஒதுக்கியிருப்பதாகவும் ஒரு தகவல்.

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் பெரிதாக வாய்ப்பு வராததால் தெலுங்கு, இந்தி சினிமாக்களின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். தற்பொழுது, மீண்டும் தமிழ் சினிமாவுக்கு விஜய் படம் மூலமாக வருகிறார்.

மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுக்க முக்கிய காரணம் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடித்த ‘அல வைகுண்டப்புரமுலொ’ படம் தான். தெலுங்கு தாண்டி தமிழிலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு படம் ஹிட்டானால், அதில் நடித்த நடிக, நடிகைகளுக்கு வரவேற்பு இருக்கும். அப்படித்தான், விஜய் படத்துக்கு தேர்வானார்.

விஜய் 65 படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்குகிறது. அதன்பிறகு, சென்னையில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

- ஆதினி

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வியாழன் 11 மா 2021