மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

விஜய்க்கு உருவான கதையில் விஷால் நடிக்கிறாரா?

விஜய்க்கு உருவான கதையில் விஷால் நடிக்கிறாரா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 65 படம் உருவாக இருந்தது. துப்பாக்கி, கத்தி & சர்க்கார் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்த நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடந்தது.

இயக்குநர் முருகதாஸ் சொன்ன கதையில் பல்வேறு மாற்றங்களை விஜய் சொன்னதாலும், தயாரிப்புத் தரப்புடன் இருந்த கருத்து வேறுபாட்டினாலும் விஜய்யை இயக்கும் வாய்ப்பை இழந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகே, சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நெல்சன் உறுதியானார். அதன்படி, நெல்சன் இயக்க விஜய் 65 படமானது வருகிற மே மாதம் துவங்க இருக்கிறது.

இந்நிலையில், விஜய்க்காக எழுதிய கதையில் வேறுநடிகரை நடிக்க வைத்த பேச்சுவார்த்தை நடத்திவந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கு கைமேல் பலன் கிடைத்திருப்பதாகவே தெரிகிறது. எனெனில், விஜய்க்கான கதையில் விஷால் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த தகவல் உண்மையா என்று தெரியவில்லை. இதுகுறித்து விஷாலும் மெளனம் காத்துவருகிறார்.

விஷாலுக்கு ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா வெளியாகி சுமாரான வரவேற்பே பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யாவுடன் நடிக்கும் எனிமி படம் தயாராகிவருகிறது. துபாயில் படக்குழு படப்பிடிப்பை நடத்திவருகிறது. தொடர்ந்து, விஷால் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2 படமும் வரிசையில் இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவலும் இருக்கிறது. இந்நிலையில், விஷாலுடனும் பேச்சுவார்த்தைப் போய்வருகிறது என்கிறார்கள். முதலில் யாரை இயக்குவார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும்.

- தீரன்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

செவ்வாய் 9 மா 2021