மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

ஆயிரமா, ஆயிரத்து ஐநூறா?அப்டேட் குமாரு

ஆயிரமா, ஆயிரத்து ஐநூறா?அப்டேட் குமாரு

நேத்துலேர்ந்து என்னவோ வீட்டம்மாக்களுக்கு தைரியம் கொஞ்சம் அதிகமாத்தான் வந்திருக்குது. பக்கத்து வீட்டம்மா என்கிட்ட சொல்லுது, ‘தேர்தலுக்குப் பிறகு யாரு ஆட்சிக்கு வந்தாலும் சரி... எங்களுக்கு 1,000 இல்லேன்னா 1,500 நிச்சயமா கெடைக்கத்தான் போகுது. அதனால புருசன்லாம் இனிமே மிரட்டக் கூடாதுனு சொல்லிட்டேன்’னு சொல்லுது. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லைனு பாட்டு வேற

நீங்க அப்டேட் பாருங்க.

amudu

பழைய வாகனங்களை அழித்தால் புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு 5% தள்ளுபடி. -நிதின் கட்கரி.

டீசல், பெட்ரோல் விலையில் தள்ளுபடி கிடைக்குமான்னு சொல்லுங்க.

பாலசுப்ரமணி

"அடேய் வருசத்துக்கு 6 சிலிண்டர் இலவசம்மாம்டா "

"ஆமாணே நல்ல திட்டம் தான். ஆனால் சிலிண்டர் டெலிவரி பாய் சார்ஜ் மட்டும் 850/- ரூபாயாம்ணே"

மெத்த வீட்டான்

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 34 சீட் ஒதுக்கீடு #

திடீர்னு அவ்வளவு பேருக்கு நான் எங்கே போவேன் - சரத்குமார் அதிர்ச்சி !

பர்வீன் யூனுஸ்

இலவச அறிவிப்பு இல்லாத கட்சித் தேர்தல் அறிக்கை, இனிமேல் கிடையாது போல.

நாகராஜ சோழன் MA.MLA

தேமுதிகவிற்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு

ஒரு வேளை இது மக்கள் நல கூட்டணி 2.0 இருக்குமோ?

𝕳𝖆𝖗𝖎𝖙𝖍𝖗𝖆𝖓𝖆𝖉𝖍𝖎 𝖗𝖆𝖏𝖆™

6 சிலிண்டர்கள் இலவசமாக தர்றேன்னு சொன்னதும் எல்லோரும் சந்தோசமா இருக்கிறப்ப நீ மட்டும் ஏன்பா சோகமா இருக்கே..

நான்தான்ங்க அம்பானி..

ச ப் பா ணி

"எனக்கு தெரியாது" என்பதே உலகின் மிகச்சிறந்த தற்காப்பு கலை

Miracle Muza

ஊரே 1000, 1500னு சந்தோசமா இருக்கு.. நீ யாருப்பா சோகமா இருக்க..

நான் தான் சார் கமல்.. என் திட்டத்த காப்பி அடிச்சிடாங்க

மயக்குநன்

நான் நல்ல பாம்பு!- மிதுன் சக்ரவர்த்தி.

ஓகோ... அதான் பாஜக மகுடிக்கு மயங்கிட்டீங்க போல..?!

⭐மித்ரன்

ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் ~ எடப்பாடி பழனிசாமி

ஆட்சில இருக்கும் போதே சிலிண்டர் விலையை குறைக்க முடியல.. இவரு இலவச சிலிண்டர் குடுக்க போறாராம்..?!

கோழியின் கிறுக்கல்!!

பெரும்பாலான வீடுகளில் ஆண்களுக்குத் தெரியாமல் பெண்கள் சேர்த்து வைக்கும் பணமே இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்திற்கு உதவுகிறது!!

-லாக் ஆப்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

செவ்வாய் 9 மா 2021