மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

டாக்டர் தள்ளிப்போக காரணம்: புது ரிலீஸ் தேதி!

டாக்டர் தள்ளிப்போக காரணம்: புது ரிலீஸ் தேதி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் டாக்டர் திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருந்தது. சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தேர்தல் காரணமாக இப்படமானது தள்ளிப் போகிறது. அதற்கு திரையுலகில் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

காரணம் 01

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துவருகிறது. ரிலீஸூக்கு முன்பே 30 கோடி வரை விற்பனை செய்துவிட திட்டமிட்டிருந்தது தயாரிப்பு தரப்பு. ஏனெனில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் நஷ்டத்திற்கு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தான் பொறுப்பேற்றிருக்கிறது. அதனை செட்டில் செய்ய வேண்டுமென்றால் ரிலிஸ் முன்பே படத்தை விற்பனை செய்து பணத்தை எடுத்தாக வேண்டும். ஆனால், விநியோகஸ்தர்கள் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை கையில் ரொக்கமாகக் கொடுக்கவே தயாராக இருக்கிறார்கள். தேர்தல் நேரமென்பதால் பெரிய தொகையை கைமாற்றுவதென்பதில் சிக்கல் இருக்கும். பொதுவாக சினிமாவில் புழங்கும் பணத்தில் பாதிக்கு மேல் கணக்கில் வராதத் தொகையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், தேர்தல் நேரத்தில் பெரும் தொகையை கைமாற்றுவது சிக்கலான ஒன்று. அதனால், படத்தை ரிலீஸ் செய்வது பெரிய சவால்.

காரணம் 02

டாக்டர் வெளியாகும் மார்ச் 26ஆம் தேதிகளில் அனல்பறக்கும் தேர்தல் பரப்புரைகள் நடந்துகொண்டிருக்கும். மக்களின் கவனமெல்லாம் அரசியல் பக்கம் தான் இருக்கும். அதோடு, ரசிகபெருமக்கள் பலரும் தேர்தல் பணிகளில் இருப்பார்கள். இவற்றையெல்லாம் தாண்டி படம் நல்ல விமர்சனம் பெற்றாலும், அடுத்தடுத்த வாரங்களில் கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் படங்கள் வெளியாகிவிடும். இந்த பரபரப்புக்குள் டாக்டர் வந்த இடமும் தெரியாது. போன தடமும் இருக்காது. இந்த இரண்டு காரணங்களால் அவசரப்பட்டு வெளியிடமால் இருப்பதே நல்லது என கருதுகிறதாம் படக்குழு.

எப்போது வெளியாகலாம் ?

ஏப்ரல் மாதம் முழுவதுமே பெரிய ஹீரோஸ் படங்கள் லைன் கட்டி வெளியாக இருக்கிறது. அதனால் ஒரு மாதம் தள்ளிப் போகிறது டாக்டர். பண்டிகை தினத்தைத் தேடி இறுதியாக, மே மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, சிம்புவின் மாநாடு ரிலீஸூம் ரம்ஜான் தினத்தில் என அறிவித்திருந்தது. மாஸ்டர் Vs ஈஸ்வரன் என விஜய் கூடவே போட்டிப் போட்டுவிட்டார். சிவகார்த்திகேயனுடனும் களத்தில் இறங்குவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிவகார்த்திகேயனுக்கான ஆடியன்ஸ் அதிகம். அதோடு, முந்தையப் படங்களின் லாபத்தைப் பொறுத்து தான் திரையரங்கங்கள் கிடைப்பதெல்லாம் இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ‘நம்மவீட்டுப் பிள்ளை செம ஹிட்.’ ஆனால், சிம்புவுக்கு ‘ஈஸ்வரன்’ பெரிய வரவேற்பை தரவில்லை. அதனால், திரையரங்கம் கிடைப்பதில் துவங்கி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வரை கொஞ்சம் சிக்கல் இருக்கும். ரிலீசுக்குப் பிறகு படத்துக்கு கிடைக்கும் வரவேற்பே இரண்டு படங்களின் வெற்றியை நிர்ணயிக்கும்.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

செவ்வாய் 9 மா 2021