மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட்!

வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட்!

நடிகர் சிம்பு உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

படப்பிடிப்புக்கு வர மாட்டார். வந்தாலும் தாமதமாக வருவார். சிம்புவை வைத்து படமெடுப்பதே தற்கொலை முயற்சிக்கு சமம் என பல விமர்சனங்கள் சிம்புவின் மீது வைக்கப்பட்ட காலம் மலையேறிப் போய்விட்டது. இப்போது, நியூ சிம்புவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த சிம்புவுக்கு திரையுலகில் மிகப்பெரிய டிமாண்ட்.

இந்த கொரோனா காலம் உலகையே புரட்டிப் போட்டது போல, சிம்புவையும் கொஞ்சம் புரட்டிபோட்டிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தின் மூலமாக இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியிருக்கிறார் சிம்பு.

லாக் டவுனில் மட்டும் 30 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறித்து அசத்தினார். அதாவது, 101 கிலோ உடல் எடையிலிருந்து கடும் உடற்பயிற்சியினால் 71 கிலோவுக்கு மாறியிருக்கிறார். ஈஸ்வரன் படத்தில் ‘கோவில்’பட சிம்புவைப் போல மாறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. சிம்புவுக்கு படமே வரவில்லையென்றாலும் இவர் என்ன செய்தாலும் இணையத்தில் வைரலாகும். தாயார் சாப்பாடு ஊட்டிவிட்டாலும், சிம்பு சிக்கன் சமைத்தாலும், குழந்தையோடு விளையாடினாலும் என எதுவென்றாலும் வைரல்தான்.

உடல் எடையைக் குறைத்தால் மட்டும் போதுமா? ஃபிட்னெஸை தக்கவைத்துக் கொள்ள விடாமல் கடும் உடற்பயிற்சியை மேற்கொண்டுவருகிறார் சிம்பு. அப்படி, அவர் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படமானது அடுத்ததாக சிம்புவுக்கு உருவாகிவருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு, கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பத்து தல’ படத்தை முடிக்க இருக்கிறார். அதன்பிறகு, பல முன்னணி இயக்குநர்களிடமும் கதைகளைக் கேட்டு உறுதி செய்துவைத்திருக்கிறார். இந்த வருடம்... அடுத்தடுத்து மாநாடு, பத்துதல, ஹன்சிகாவுடன் மஹா படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

செவ்வாய் 9 மா 2021