மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 மா 2021

ராம்சரண் படத்தில் கொரிய நடிகை: ஷங்கரின் புது திட்டம் !

ராம்சரண் படத்தில் கொரிய நடிகை: ஷங்கரின் புது திட்டம் !

இந்திய சினிமாவில் கொஞ்சம் காஸ்ட்லியான இயக்குநர் ஷங்கர். படத்துக்கு படம் பிரம்மாண்டத்தையும், பட்ஜெட்டையும் உயர்த்திக் கொண்டுப் போகும் இவர் கைவசம் இரண்டுப் படங்கள் இருக்கிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படம் படப்பிடிப்பு பாதி முடிந்ததோடு நிற்கிறது. கடந்த வருடம் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு இன்னும் படப்பிடிப்பைத் துவங்கவில்லை. எப்படியும், தேர்தல் முடிந்து கமல்ஹாசன் வந்தால் தான், இந்தியன் 2வுக்கு வெளிச்சம்.

ஒற்றைப் படத்துக்காக நீண்ட காலங்களை செலவழித்துவிட்ட ஷங்கர், அடுத்தப்படத்துக்கு தயாராகிவிட்டார். ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கிறார். இந்திய சினிமாவாக உருவாக இருக்கும் இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் 50வது தயாரிப்பில் உருவாகும் படமென்பது சிறப்பு. இந்தியன் 2 படத்தை விட, அதிகப் பொருட் செலவில் இப்படம் உருவாக இருக்காம்.

தற்பொழுது, ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடித்துவரும் ‘ஆர் ஆர் ஆர்’ படப்பிடிப்பில் இருக்கிறார் ராம்சரண். இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டப் பிறகு, ஷங்கர் படம் துவங்குகிறது.

இந்த இடைவெளியில் படத்தில் பணியாற்ற இருக்கும் கலைஞர்களைத் தெர்ந்தெடுக்கும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. ராம் சரணுடன் நடிக்க கொரிய நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறது படக்குழு. பிரபல கொரிய நடிகையான பே சூஜி என்பவர் தான் அவர். ராம் சரணுக்கு ஹீரோயினாக நடிக்கிறாரா அல்லது முக்கிய ரோலில் நடிக்கிறாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதோடு, இந்தியன் 2வில் பணியாற்றிவரும் அனிருத், ராம் சரண் படத்துக்கும் இசையமைக்க இருப்பதாகவும் ஒரு தகவல்.

- தீரன்

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

திங்கள் 8 மா 2021