காப்பி பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு


இது என்னோட திட்டம்னு ஒரு தலைவரு அறிவிக்கிறாரு... இதை நான் முன்னமே சொல்லிட்டேன், நீ காப்பியடிக்கிறியானு இன்னொரு தலைவரு கேட்குறாரு. ஆனா உங்க ரெண்டு பேருக்கு முன்னாடியே நான் செயல்படுத்திக்கிட்டிருக்கேன், நீங்க ரெண்டு பேரும் காப்பியடிக்கிறீங்கனு சொல்றாரு இன்னொருத்தரு. பசங்களுக்கு பரிட்சையெல்லாம் இல்லை. ஆல் பாஸ்னு அறிவிச்சாச்சு. அதனால பசங்க பண்ற வேலையை இப்ப பாலிடிக்ஸ்ல பண்ணிக்கிட்டிருக்காங்க. மக்கள் யாருக்கு போடுவாங்கன்ற பதட்டத்துல காப்பியடிக்கிறாங்க.
நீங்க அப்டேட் பாருங்க
Siva_KS
அதிமுக #EPS ஆதரவு வேட்பாளர்கள் பட்டியல்
அதிமுக #OPS ஆதரவு வேட்பாளர்கள் பட்டியல் னு
இப்படி வருமோ
ச ப் பா ணி
வார்த்தைகள் ஆயுதமாகும் போது
மௌனங்கள் கேடயமாகின்றன
Addicted on repeat mode @SastikaR pic.twitter.com/zZUioHjwcG
— கார்த்திக் (@karthikeyanyell) March 3, 2021
mohanram.ko
21000 ரூபாய்க்கு ஒரு குண்டு பல்புனு சொல்றியே, அவ்ளோ குண்டாவா இருக்கும்?
amudu
இணைய வசதி உள்ள மொபைல்களிலும் குழந்தைகளுக்கு, " குட் டச்", " பேட் டச்" எதுவென சொல்லித்தர வேண்டும்
பர்வீன் யூனுஸ்
இலவச அறிவிப்பு இல்லாத கட்சித் தேர்தல் அறிக்கை, இனிமேல் கிடையாது போல.
Dr. M. A. N. Loganathan
அப்பனுக்கு உப்புமா
பிள்ளைக்கு ஷவர்மா
நல்லா வருவீங்கம்மா
நாகராஜ சோழன் MA.MLA
தொழில் துவங்குவதற்கான உரிமம் எளிதாக்கப்படும்: பிரதமர் உறுதி
உரிமம் எளிது தான் , ஆனா போடுற GST சதவீதம் தான் அதிகமா இருக்கே ஜி...
amudu
சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பாஜக காரணம் அல்ல. -சி.டி.ரவி.
எல்லாம் ரெய்டு பயம் தான்ப்பா காரணம்.
mohanram.ko
நல்ல லொகேஷன்ல லாட்ஜ் புக் பண்ணிட்டேன் மாமா...
சினிமா பாட்டு எழுதவா மாப்ள...
சினிமா பாட்டா? தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மாமா...
balebalu
குடும்ப தலைவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ன்னு யாராவது அறிவிங்கப்பா ! அப்படியாச்சும் 90 ஸ் கிட்ஸ் க்கு கலியாணம் ஆகட்டும் .
சரவணன். ℳ
தமிழக பிரச்சாரத்தில் ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா புகார்.
அதானே, நீங்க இருக்கும் போது அவங்க எப்படி நடத்தை விதிகளை மீறலாம்...?
கடைநிலை ஊழியன்
ஏன் தலைவரே அவன அடிக்குறீங்க ??
தொகுதிக்கு போய் பிரச்சாரம் பண்ணுடா னு சொன்னா, வெயில் ரொம்ப அடிக்குது work from home பண்ணட்டுமா னு கேக்குறான்..
மயக்குநன்
ஏன் தலைவரே அவன அடிக்குறீங்க ??
தொகுதிக்கு போய் பிரச்சாரம் பண்ணுடா னு சொன்னா, வெயில் ரொம்ப அடிக்குது work from home பண்ணட்டுமா னு கேக்குறான்..
ச ப் பா ணி
கல்யாணத்துக்கு முன் கன்வீன்ஸ் பண்றோம்
கல்யாணத்துக்குப் பின் கன்வீன்ஸ் ஆகிறோம்
ஆண்கள்
கோழியின் கிறுக்கல்!!
வாடகை வீட்டு சொந்தக்காரரே பல நடுத்தர வர்க்கத்தினருக்கு புது வீடு கட்டுவதற்கான உந்து சக்தியாக இருக்கின்றனர்!!
லாக் ஆஃப்