மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 மா 2021

அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் !

அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் !

சென்னையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

விளையாட்டுகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். ஓவ்வொரு காலக்கட்டத்திலும் புதிது புதிதாக எதாவது விளையாட்டின் மீது ஆர்வம் காட்டுவார். கார் மற்றும் பைக் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சமீபகாலமாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கவனம் செலுத்தி வந்தார்.

படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அதிகமாக சுப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக கிளம்பி விடுவார் அஜித். இந்நிலையில், 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் சம்பியன்ஷிப் போட்டி கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதை, சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் நடத்தினார்.

தமிழ்நாட்டிலிருந்து மொத்தமாக சுமார் 900த்துக்கும் மேல் கலந்துகொண்டனர். இதில், சென்னை ரைஃபிள் கிளப், கோவை ரைஃபிள் கிளப் உள்ளிட்ட 52 கிளப்கள் பங்கேற்றன. இதில், அஜித் விளையாடிய சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களை வாங்கிக் குவித்தது. குறிப்பாக, நடிகர் அஜித் ஆறு பதக்கங்களை பல்வேறு துப்பாக்கி சுடுதல் பிரிவில் வென்றார்.

வேதாளம் பட நேரத்தில் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். நடிகர் அப்புக்குட்டியை இவர் எடுத்த புகைப்படம் வைரலானது. விஸ்வாசம் பட நேரத்தில் சென்னை ஐஐடி-யுடன் இணைந்து மினி ஹெலிகாப்டர் இயக்குவதற்காக மாணவர்களுக்குப் பயிற்சியளித்தார். சினிமாவில் ஆர்வம் கொண்டாலும், இப்படியான புதுப்புது விஷயங்களையும் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஏர் பிஸ்டல் - 10 மீ (தங்கம்), சென்டர் ஃபயர் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) (25 மீ) - (வெள்ளி) , சென்டர் ஃபயர் பிஸ்டல் (என்.ஆர்) - (25 மீ) - தங்கம் , ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) - (25 மீ) - தங்கம் , ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (என்.ஆர்) - (25 மீ) - வெள்ளி, ஃப்ரீ பிஸ்டல் (50 மீ) - தங்கம் ஆகிய பதக்கங்களை அஜித் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வலிமை படம் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இசைக்கோர்ப்புப் பணிகளும் ஒரு பக்கம் மும்மரமாக நடந்துவருகிறது. ரசிகர்கள் வலிமை அப்டேட்டுக்காக காத்திருந்தால், புதிது புதிதாக அஜித் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

-ஆதினி

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 8 மா 2021