மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா!

அகமதாபாத்தில் நேற்று (மார்ச் 6) நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. குறிப்பாக அகமதாபாத்தில் நேற்று (மார்ச் 6) நிறைவடைந்த கடைசி போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 122 தரநிலைப் புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 118 புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும், 113 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாமிடத்திலும் உள்ளது.

இதற்கு அடுத்த இடங்களில் இங்கிலாந்து (105), பாகிஸ்தான் (90), தென் ஆப்பிரிக்கா (89), இலங்கை (83), வெஸ்ட் இண்டீஸ் (80), வங்கதேசம் (51) ஆகிய அணிகள் உள்ளன.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

ஞாயிறு 7 மா 2021