மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

மது அருந்திவிட்டு வரும் கலை இயக்குநர்: ஜென் நிலைக்கு சென்ற மணிரத்னம்!

மது அருந்திவிட்டு வரும் கலை இயக்குநர்: ஜென் நிலைக்கு சென்ற மணிரத்னம்!

கொரோனாவால் தடைப்பட்டுக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒரு வழியாக முக்கால்வாசி முடிந்துவிட்டது. ஆனால் இயக்குநர் மணிரத்னத்தால் நிம்மதி பெருமூச்சு விட முடியாத சூழல் உருவாகிவிட்டது. கலை இயக்குநர் தோட்டாதரணியால் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

``பொன்னியின் செல்வன்’’ மணிரத்னத்தின் கனவு படம் என்பதாலும், உச்ச நட்சத்திரங்கள் சங்கமித்திருப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே சமயம் மணிரத்னத்தை ஓய்வின்றி பணியாற்ற வைத்துள்ளது. பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து பிரமாண்ட படம் அதுவும் இரண்டு பாகங்களை ஒரே நேரத்தில் எடுப்பது என்பது மிகப்பெரிய சவால். கொஞ்சம் திணறினாலும், இதனைக் கச்சிதமாக கையாண்டு வருகிறார் மணிரத்னம்.

``பொன்னியின் செல்வன்’’ படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்கள் அனைவரின் தேதிகளையும் வாங்கி ஒன்று திரட்டி ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் மணிரத்னம். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்துத் தயாரிக்கின்றன. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குநராக தோட்டாதரணி பணிபுரிகிறார்.

பிரமாண்ட வரலாற்று புனைவுப் படம் என்பதால் கலை இயக்குநருக்கு தான் பணி அதிகம். ஆனால் மணிரத்னம் தோட்டதரணி மீது பெரும் அதிருப்தியில் இருக்கிறாராம். அரங்குகள் அமைப்பதில், தோட்டாதரணி அதிக செலவு செய்வார் என்பதால் வடிவமைப்பு பணிகள் மட்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அரங்குகள் அமைக்கும் பணி இளையராஜா என்பவர் செய்து வந்தார். ஆனால் அவர் படப்பிடிப்புக்கு மது அருந்திவிட்டு வருவதாக புகார்கள் எழ, தோட்டாதரணியிடமே அந்த பொறுப்புகளை ஒப்படைத்தார் மணிரத்னம். ஆனால் இளையராஜா பணியாற்றிய அதே குழுவுடன் தான் தோட்டாதரணியும் பணிபுரிகிறார்.

எனவே அரங்கு அமைக்கும் பணிகள் மெதுவாக நடைபெறுகிறதாம். இந்தப் பிரச்னையை சரி செய்ய முடியாமல் வருத்தத்தில் இருக்கிறார் ஸ்டார் இயக்குநர் மணிரத்னம். படம் நல்லபடியாக முடிய வேண்டும் என்பதால் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஜென் நிலையில் இருக்கிறாராம்!

- தீரன்

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஞாயிறு 7 மா 2021