மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

தொட்டதெல்லாம் பொன்… தனுஷால் தாணுவுக்கு ஜாக்பாட்

தொட்டதெல்லாம் பொன்… தனுஷால் தாணுவுக்கு ஜாக்பாட்

தனுஷுக்குத் தொட்டதெல்லாம் பொன் ஆகும் காலம் போல! அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தின் விநியோக உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தை கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார்.

லாக் டவுன் சூழலால் கர்ணன் படப்பிடிப்பு சிறிது காலம் தடைப்பட்டிருந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து பட ரிலீஸூக்கான பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இப்படத்தின் முதல் பாடலான `` கண்டா வர சொல்லுங்க" பாடல் வெளியாகி ட்ரெண்டானது. தொடர்ந்து இரண்டாவது சிங்கிளாக ``பண்டாரத்தி புராணம்’’ என்ற பாடலும் வெளியாகி ஹிட் அடித்தது.

கர்ணன் படமானது வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் தனுஷ். தற்போது படக்குழு விளம்பர வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கிடையே படத்தின் உரிமையை பெரும் விலைக்கு விநியோகஸ்தர்கள் விலைக்கொடுத்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் - மாரி செல்வராஜ் காம்போ மீதான எதிர்பார்ப்பினால் விநியோகஸ்தர்கள் தைரியமாக விலை கொடுத்துள்ளதாக தெரிகிறது. படம் வெளியீட்டுக்கு முன்னரே, தாணு பெரும் லாபத்தை ஈட்டியிருக்கிறார் என்று கணிக்கிறது டிரேடிங் வட்டாரங்கள்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

ஞாயிறு 7 மா 2021