மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல்!

ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல்!

14ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் நாளை (மார்ச் 8) முடிவடையும் நாளில் ஐபிஎல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக நேற்றே (மார்ச் 6) இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் முடிவடைந்துவிட்டது. அதனால் ஐபிஎல் தேதியை பிசிசிஐ இன்றே (மார்ச் 7) அறிவித்துள்ளது.

இந்த முறை ஜூன் முதல் வாரம் வரை ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், இப்போது இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருப்பதால் மே இறுதிக்குள் ஐபிஎல் முடிவடையும் வகையில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 30ஆம் தேதி நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டிகள் இந்த முறை மகாராஷ்டிராவில் உள்ள நான்கு மைதானங்கள், குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் என இரண்டு மாநிலங்களில் மட்டுமே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற்பகல் போட்டிகள் 3.30 மணிக்கும் இரவு நடைபெறும் போட்டிகள் 7.30 மணிக்கும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையே ஐபிஎல் 2021 அட்டவணை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

ஞாயிறு 7 மா 2021