மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

தயாரிப்பாளர் சங்கம் அனுப்பிய நோட்டீஸ்: வெடிக்கும் மோதல் ?

தயாரிப்பாளர் சங்கம் அனுப்பிய நோட்டீஸ்: வெடிக்கும் மோதல் ?

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமானது நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களை விட, அவர்களுக்கான சங்கம் தான் அதிகமாக இருக்கிறது. காலம் காலமாக தமிழ் சினிமாவுக்கென தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமானது இயங்கிவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் புதிதாக இரண்டு சங்கங்கள் உருவெடுத்தன.

பாரதிராஜா தலைமையில் ‘தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ உருவானது. த.தி.தா.ச முறையாக செயல்பட வில்லையென, இந்த தயாரிப்பாளர் சங்கத்தில் தற்பொழுது படமெடுத்துக் கொண்டிருக்கும் நடப்புத் தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கியது.

அடுத்ததாக, டி.ராஜேந்தர் தலைமையில், ‘தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்’. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் முரளியை எதிர்த்து போட்டியிட்டார் டி.ராஜேந்தர். முரளி தலைமையிலான அணி வெற்றியைப் பெற்றது. அதனால், சங்கத்திலிருந்து வெளியேறி புதிதாக, இந்த ‘தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை துவங்கினார் டி.ஆர்.

ஏற்கெனவே, டி.ராஜேந்தரின் புதிய தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது முரளி தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். அந்த நேரத்தில் கூட, பாரதிராஜாவின் தலைமையிலான சங்கத்திற்கு எந்த வித கருத்தும், நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், பாரதிராஜாவின் தலைமையிலான நடப்புத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், பாரதிராஜா தவிர மற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். தலைமையே பாரதிராஜா தான். ஆனால், ஏன் பாரதிராஜாவை தவிர மற்றவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் என்ற கேள்வி எழுகிறது.

சமீபத்தில், நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தினை கலைத்துவிட்டு தயாரிப்பாளர் சங்கத்தோடு இணைந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார் முரளி. ஆனால், அதை ஏற்க மறுத்திருக்கிறது பாரதிராஜா தலைமையிலான சங்கம். அதோடு, சினிமாவில் எதாவது பிரச்னையென்றால் இந்த இரண்டு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும் அறிக்கை வெளிவருகிறதாம். அதோடு, எந்தப் பிரச்னையென்றாலும் இரண்டு சங்கமுமே தலையிடுகிறதாம். இதனால் பெரும் குழப்பம் நீடிக்கிறது என்பதால், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முறையான நோட்டீஸ் வந்தவுடன், சங்க விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள் முரளி தலைமையிலான ஒரிஜினல் தயாரிப்பாளர் சங்கம்.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 7 மா 2021