மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

சந்திரமுகி 2 டிராப்பா? ராகவா லாரன்ஸ் பதில் !

சந்திரமுகி 2 டிராப்பா? ராகவா லாரன்ஸ் பதில் !

பேய் படங்களைக் கொடுப்பதில் பெயர் போனவர் ராகவா லாரன்ஸ். இவரின் முனி,காஞ்சனா படங்களுக்கு மிகப்பெரிய ரசிக பட்டாளமே இருக்கிறது. கமர்ஷியல் காமெடிப் பேய் படமெனும் டிரெண்டை உருவாக்கியதே ராகவா லாரன்ஸ் தான்.

இவர் நடிப்பில் தற்பொழுது ருத்ரன் படம் உருவாகி வருகிறது.. தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். சமீபத்தில் கூட, படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஒரு அறிவிப்பு ஒன்றைத் தந்திருந்தார். ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகக் கூறியிருந்தார். பி.வாசு இயக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதன்பிறகு, இந்தப் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

சமீபத்தில் வதந்தி ஒன்று உலாவிவருகிறது. அதில், சந்திரமுகி 2 படத்தினைக் கைவிட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த வதந்தி பரவக் காரணமும் சொல்கிறார்கள். தொற்றுநோயைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஊதியக் குறைப்பை விரும்புவதாகவும், அதற்கு லாரன்ஸ் தயாராக இல்லை என்றும் சொல்கிறார்கள். அதனால், சந்திரமுகி 2 படத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இந்த தகவலுக்குப் பதிலளிக்கும் விதமாக, சந்திரமுகி 2 படம் டிராப் ஆகவில்லை. அதோடு, ருத்ரன் படத்தை முடித்துவிட்டு சந்திரமுகி 2 துவங்கலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் சந்திரமுகி 2வில் ஜோதிகா, சிம்ரன் மற்றும் கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வந்தது. அந்த செய்தியும் உண்மையில்லை என ஏற்கெனவே, ராகவா லாரன்ஸ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் லக்‌ஷ்மி படம் பாலிவுட்டில் வெளியானது. இப்படம், காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் என்பது கூடுதல் தகவல். தமிழில் பெரிய ஹிட்கொடுத்த காஞ்சனா, இந்தியில் லக்‌ஷ்மியாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

- தீரன்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 5 மா 2021