மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

350 தியேட்டர்களில் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ்... பிரச்சினையும் தீர்வும்!

350 தியேட்டர்களில் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ்... பிரச்சினையும் தீர்வும்!

எஸ்.ஜே.சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வெளியீட்டு தேதியை அறிவித்தப் பிறகு, படத்துக்கு தடை ஏற்பட்டதால் சில தினங்களாக ரசிகர்கள் கலக்கத்தில் உறைந்துவிட்டனர். இந்நிலையில் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். ராக்போர்ட் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தரவேண்டிய 1.24 கோடி கடன் தொகைக்காக ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் சார்பாக வருண்மணியன், அப்படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். நீதிமன்றத்தில் வெளியீட்டுக்குத் தடை கோரியதை தொடர்ந்து, நீதிமன்றம் பட வெளியீட்டுக்குத் தடை விதித்தது. இதனால்தான் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில் தற்போது படவெளியீடு குறித்த சந்தேகங்களுக்கு எஸ்.ஜே.சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பட வெளியீடு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.ஜே.சூர்யா, ``ரேடியன்ஸ் மீடியாவிற்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் இடையிலான பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது, படத்திற்கான நீதிமன்ற தடை நீக்கப்பட்டது. பிரச்னைகள் நீங்கி பட வெளியீடு நடைபெற பிரார்த்தனை செய்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நம்ம படம் கண்டிப்பா வெளியாகுதுங்க..’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

``நெஞ்சம் மறப்பதில்லை’’ இன்று திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில் படத்துக்கான முன்பதிவு எல்லா இடங்களிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாளாக காத்திருப்பில் இருக்கும் செல்வராகவன் படமென்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. குறிப்பாக, 350 திரையரங்குகள் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லரிலும், டீசரிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அற்புதமான நடிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இப்படம் குறித்து தனுஷ், சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், அட்லீ உள்ளிட்டோர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வெள்ளி 5 மா 2021