மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 மா 2021

கின்னஸ் நேர்காணல்: அப்டேட் குமாரு

கின்னஸ் நேர்காணல்: அப்டேட் குமாரு

”அண்ணே... இன்னிக்கு எட்டாயிரம் பேரை நேர்காணல் பண்ணியிருக்கோம். நாளைக்கு ஒரு பத்தாயிரம் பேரை நேர்காணல் பண்ணிடலாமா? கின்னஸ்லேர்ந்து கேக்குறாங்க....”

‘வேணாம்னே... நீங்க சொல்வது தவறுங்கண்ணே... பிரசாரம் பண்ணப் போறோம்ல அங்கயே வச்சு அப்படியே நேர்காணல் பண்ணிக்கலாம். நேர்காணலுக்கு வந்தவங்க எல்லாம் ஓட்டுப் போட்டாலே போதும்ணே....”

நீங்க அப்டேட்டை பாருங்கண்ணே...

Siva_KS

நான் நடித்த நெடுந்தொடர் என் அதிக நேரத்தை எடுத்ததால், அதை விட்டு மக்களுக்காக இப்போது சேவை செய்ய வந்துள்ளேன். - #ராதிகா_சரத்குமார்

நெடுந்தொடரை விட்டதே மக்களுக்கான பெரிய சேவை தானே

ச ப் பா ணி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்...!

அப்படி என்ன வேலை..?

கலாம் ங்கற பேரை மாத்தி மாத்தி எழுதணும்..

balebalu

இதுக்கு பேசாம பெங்களூரிலிருந்து அரை மணி நேரத்தில் பிளைட் ல வந்திருக்கலாம் !

Sasikala

𝕳𝖆𝖗𝖎𝖙𝖍𝖗𝖆𝖓𝖆𝖉𝖍𝖎 𝖗𝖆𝖏𝖆

வருவாங்கன்னு நினைச்ச "சின்னம்மா" வரலன்னு சொல்லிட்டாங்க,

வரமாட்டாங்கன்னு நினைச்ச "சித்தி" வந்துட்டாங்க.

!அரசியல் டிசைன் அப்படி.

நாகராஜ சோழன் MA.MLA

“ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றாமல் ஓயமாட்டேன்” – கமல்ஹாசன்

ஓவ்வொரு தமிழன் தலையிலும் 62 ஆயிரம் கடன் இருக்கு, அதை குறைக்க ஏதாவது திட்டம் இருக்கா ஆண்டவரே...

மயக்குநன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு 'அருமையாக' உள்ளது!- நடிகை கவுதமி.

மக்களவைத் தேர்தல் மாதிரி 'வெறுமையா' ஆகாம இருந்தா சரி..!

ச ப் பா ணி

கடன் வாங்குவதை விட கஷ்டமானது

கடன் கேட்க வாய்ஸ் மாடுலேஷனை வரவைப்பது

துயிலன்

வெற்றி என்பது கருவேப்பிலை, கொத்தமல்லி கிடையாது - ராதிகா சரத்குமார்

ஆமாம் மேடம் இப்போலாம் அதை கொசுறா கூட தரமாட்டேங்கிறாங்க.

மயக்குநன்

திமுக வெற்றி பெற்றால் மத்திய அரசு திட்டம் எதுவும் தமிழகத்திற்கு வராது!- ஹெச்.ராஜா.

நீட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் மாதிரியான திட்டங்களைச் சொல்றாரோ..?!

கோழியின் கிறுக்கல்!

எப்படா வீட்டை விட்டு வெளியே போவோம் என்கிற பருவத்தில் ஆரம்பித்து,

எப்படா வீட்டுக்கு போய் படுப்போம் என்பதாக முடிகிறது வாழ்க்கை!!!

-லாக் ஆப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வியாழன் 4 மா 2021