மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 மா 2021

ரெண்டு லட்சம் கடன் தரட்டுமா?: அப்டேட் குமாரு

ரெண்டு லட்சம் கடன் தரட்டுமா?: அப்டேட் குமாரு

அண்ணன் ஒரு ரெண்டு லட்சம் கடன் கொடுக்குறேன் எடுத்துக்குறீங்களானு நம்ம பையன் ஒருத்தன் கேட்டான். என்னடா, பயபுள்ள இவ்ளோ பாசமா இருக்கானேனு நினைச்சேன். அப்புறம் விசாரிச்சாதான் தெரியுது மெட்ராஸ்லேர்ந்து அந்த ரெண்டு லட்சத்தை பேப்பர் இல்லாம ஊருக்கு கொண்டு போறதுக்கு பயபுள்ள நம்மளை பலியாடா பயன்படுத்தப் பாக்குதுனு. அப்பாடி எம்புட்டு விவரமா யோசிக்குறானுங்க. இவங்களை எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுல சேர்த்து விடுங்கப்பா.

நீங்க அப்டேட் பாருங்க

ச ப் பா ணி

எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் புரிய வைத்துவிடுகின்றர் சம்பாதிக்கவேண்டியதன் அவசியத்தை..

அது பணத்தையோ மனிதர்களையோ..!

கோழியின் கிறுக்கல்!!

வீட்டில் தோசைக்கு கலர் கலரா சட்னி வைத்தால் நம்ம மேல் எவ்வளவு பாசம் என்று சிலிர்த்து உண்பவரை விட,

எந்த சட்னி என்றைக்கு வைத்ததோ என்று பயந்து கொண்டே உண்பவரே அதிகம்!!

மயக்குநன்

தமிழக மக்களைக் காப்பாற்றுவதற்காக, நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளேன்!- டி.ராஜேந்தர்.

கட்சியைக் கலைக்கப் போறாரோ என்னவோ..?!

நாகராஜ சோழன் MA.MLA

டாப்சி மற்றும் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு!

மத்திய அரசை எதிர்துப் பேசுபவர்களுக்கு அரசு தரும் அற்புத பரிசு

"இன்கம்டாக்ஸ் ரெய்டு"...

கடைநிலை ஊழியன்

கடந்து செல்ல பழகிய பிறகு, தோல்விகளும் துரோகங்களும் ஒரு பொருட்டே இல்லை !!

balebalu

வெளி ஊரிலிருந்து ( நாட்டிலிருந்து ) பிள்ளை வர போகிறான் என்று தெரிந்ததுமே சந்தோசத்தில் ஐசியூ விலிருந்து நார்மல் வார்டு க்கு மாறி விடுகின்றனர் பெற்றோர்கள்

𝕳𝖆𝖗𝖎𝖙𝖍𝖗𝖆𝖓𝖆𝖉𝖍𝖎 𝖗𝖆𝖏𝖆

சசிகலாவை அதிமுகவில் இணைக்குமாறு பாஜக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுவது 100 சதவீதம் வதந்தி.

- மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

அப்ப உண்மையாதான் இருக்கும்.

தர்மஅடி தர்மலிங்கம்

நீங்க சரியா மொழிபெயர்ப்பு செய்யவில்லை மேடையில் ஹெச்.ராஜாவிடம் கூறிய அமித்ஷா..

இப்படி அவரே கண்டுபிடிக்கிற அளவுக்கா 'தவறாக மொழிபெயர்ப்பு' செய்வீங்க!

சரவணன். ℳ

அமித்ஷா ~ திமுக கட்சி எப்போதும் அவர்கள் குடும்பம் பற்றி மட்டுமே கவலைப்படும்...

ஜெய்ஷா ~ ஆமாம்பா, ஆமா...!

மயக்குநன்

ம.நீ.ம ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்!- கமல்.

இப்பவே 'கலாம்' பேரை திருப்பி எழுதுற வேலையைப் பார்த்துட்டு இருக்கிறவங்க எண்ணிக்கை கோடியைத் தாண்டும் போலிருக்கே..?!

கோழியின் கிறுக்கல்!!

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது!

Twitter அரசியல் ஓட்டுக்கு உதவாது!!

-லாக் ஆப்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

புதன் 3 மா 2021