மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 மா 2021

தனுஷ் ஹாலிவுட் ஷூட்டிங்.. எங்கு நடக்கிறது, என்ன ரோல் ? புது தகவல்

தனுஷ் ஹாலிவுட் ஷூட்டிங்.. எங்கு நடக்கிறது, என்ன ரோல் ? புது தகவல்

கோலிவுட்டின் பிஸியான நடிகர்களில் ஒருவரான தனுஷ், அமைதியாக பாலிவுட் ஹாலிவுட் என டாப் கியரில் போய் கொண்டிருக்கிறார். கை நிறையப் படங்கள் வைத்திருந்தாலும் தேதிப் பிரச்னை இதுவரை வராமல் நேர்த்தியாக கையாள்கிறார் தனுஷ்.

கார்த்திக் நரேனின் 'D43' படப்பிடிப்பின் முதல் கட்டத்தை முடித்த கையோடு, தற்போது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார். அவர் நடிக்கும் தி க்ரே மேன் (The Gray Man) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதற்கு முன்னர் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றபோதும் அமெரிக்கா சென்றிருந்தார் தனுஷ். அந்த பணிகள் முடிந்து இன்றிலிருந்து படப்பிடிப்பு தொடங்கியது.

அவென்ஜர்ஸ் படத்தை இயக்கிய ``ரூஸோ பிரதர்ஸ்’’அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்கத்தில், நெட் பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் தான் தி க்ரே மேன் . இந்தப் படத்தில் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ், கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதில் தனுஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். .

இத்திரைப்படம் மார்க் கிரேனி எழுதிய ஆக்‌ஷன் திரில்லர் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் பணத்திற்காக கொலை செய்யும் கூட்டம் ஒன்றின் தலைவனாக தான், தனுஷ் நடிக்க போகிறார் என மார்க் கிரேனி தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், `` ட்விட்டரில் என்னை 6000 பேர் பின் தொடர்கிறார்கள். அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் இந்திய நடிகரான தனுஷ் என்னை பின்தொடர்வதுதான் பெரிய விஷயம். ஏன் என்றால் அவரை 9.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அவர் உண்மையில் மிகப் பெரிய திறமைசாலி’’ என்று பாராட்டி தள்ளியுள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி உள்ளது. இரண்டு மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

செவ்வாய் 2 மா 2021