மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

நான்காவது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து விலகும் பும்ரா!

நான்காவது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து விலகும் பும்ரா!

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்து நடைபெற உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது அல்லது டிரா செய்வதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெறும்.

கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் சென்னை, ஆமதாபாத் மைதானங்கள் அனைத்தும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் தன்னை விடுவிக்குமாறு பும்ரா கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நான்காவது டெஸ்டில் இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

ஞாயிறு 28 பிப் 2021