மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

ஐபிஎல் கிரிக்கெட்: நான்கு நகரங்களில் நடத்த ஆலோசனை!

ஐபிஎல் கிரிக்கெட்: நான்கு நகரங்களில் நடத்த ஆலோசனை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நான்கு நகரங்களில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வெற்றிகரமாக அரங்கேறியது.

இந்த ஆண்டுக்கான 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் நடத்துவது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இருக்கிறது. இருப்பினும் இதுவரை போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி இறுதி செய்யப்படவில்லை.

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் வான்கடே, பிராபோர்ன், டி.ஒய்.பட்டீல், ரிலையன்ஸ் ஆகிய நான்கு ஸ்டேடியங்கள் இருப்பதால் மும்பையில் கொரோனா உயிர் பாதுகாப்பு வளையத்தை அமைத்து அனைத்து ஆட்டங்களையும் அங்குள்ள ஸ்டேடியங்களில் நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நினைத்தது.

ஆனால், தற்போது மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மும்பையில் எல்லா ஆட்டங்களையும் நடத்த மேற்கொண்ட முயற்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு சில நகரங்களில் போட்டியை நடத்தலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்க ஆரம்பித்து இருக்கிறது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சீனியர் நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலம்தான் இருக்கிறது. விரைவில் சில முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். மராட்டிய மாநிலத்தில் தற்போதுபோல் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்தால் மும்பையில் மட்டும் ஐபிஎல் போட்டியை நடத்துவது என்பது முடியாத காரியமாகிவிடும்.

இதனால் இந்தப் போட்டியை நான்கு அல்லது ஐந்து நகரங்களில் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்கள் ஐபிஎல் போட்டியை நடத்த தயாராக இருக்க வேண்டும். ஆமதாபாத்தில் ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டியை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 28 பிப் 2021