மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

கே.ஜி.எஃப் இயக்குநர், பிரபாஸ் கூட்டணியான ‘சலார்’ ரிலீஸ் தேதி!

கே.ஜி.எஃப் இயக்குநர், பிரபாஸ் கூட்டணியான ‘சலார்’ ரிலீஸ் தேதி!

இந்திய சினிமாவின் சென்சேஷன்ல் ஹீரோ ‘பிரபாஸ்’. ராஜமெளலி இயக்கத்தில் இவர் நடித்த பாகுபலி & பாகுபலி 2 படங்கள் இந்தியளவில் மிகப்பெரிய ஹிட். அதன்பிறகு வெளியான ‘சாஹோ’ படமும் பெரும் பொருட்செலவில் உருவாகி வெளியானது.

இந்தியளவில் ரிலீஸூக்கு அடுத்தடுத்து மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பிரபாஸ். விக்ரமாதித்யா இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் நடித்திருக்கும் ராதே ஸ்யாம் படம் அடுத்து ரிலீஸாக இருக்கும் படம். இதைத்தொடர்ந்து, ‘சலார்’ & ‘ஆதி புருஷ்’ படங்கள் படப்பிடிப்பில் இருக்கிறது.

இதில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பொதுவாக, ஒரு படத்தின் ரிலீஸை முன்கூட்டியே சொல்லிவிட்டு, வேலையை ஆரம்பித்துவிடுவது பிரசாந்த் நீல் ஸ்டைல். கே.ஜி.எஃப் படத்துக்கும் முன்கூட்டியே ரிலீஸ் தேதியை அறிவித்தார். அப்படியே, சலார் படத்தின் ரிலீஸ் தேதியை இப்போதே அறிவித்துவிட்டார். அதோடு, பிரபாஸூக்கு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஞாயிறு 28 பிப் 2021