மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

தேர்தலுக்கு அப்புறம் பாக்கலாம் மாப்ளை: அப்டேட் குமாரு

தேர்தலுக்கு அப்புறம் பாக்கலாம் மாப்ளை: அப்டேட் குமாரு

தீபாவளிக்கு முன்னால கடன் கேட்டா தீபாவளி கழிச்சு பாத்துக்கலாம்னு சொல்றானுங்க. பொங்க நேரத்துல உதவி கேட்டால் பொங்கல் முடிஞ்சு பாத்துக்கலாம்னு சொல்றானுங்க. இப்ப போய் ஏதாச்சும் உதவி கேட்டால் எலக்‌ஷனுக்கு பெறவு பாக்கலாம் மாப்ளைனு சொல்றானுங்க. தீபாவளி பொங்கலாச்சும் பரவாயில்லை. எலக்‌ஷனுக்கு பெறவு இவன் என்னவா இருக்கப் போறான்? ஓட்டு போட்டுட்டு அதே பேண்ட் சட்டையோடுதான் சுத்தப் போறான். இவனுக்கு ஏன் இந்த ஒரு சாக்கு.

நீங்க அப்டேட் பாருங்க

கோழியின் கிறுக்கல்!

டீவி அரசியல் விவாதங்களை விட,

டீக்கடை விவாதங்கள் ரணக் கொடூரமாக இருக்கின்றன!!

மயக்குநன்

துன்பம் வரும்போது மக்களுக்கு பக்கபலமாக நின்றதே அதிமுக அரசின் சாதனை!- முதல்வர் பழனிசாமி.

அந்த துன்பத்துக்கு காரணமே அந்த அரசுங்கிறதுதான் இதில் உள்ள ட்விஸ்ட்டே..!

நாகராஜ சோழன் MA.MLA

உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் - பிரதமர் மோடி.

இப்படி பேசிட்டு, பட்ஜெட் ல

மொழி வளர்ச்சி நிதி சமஸ்கிருதத்திற்கு தான் அதிகமா ஒதுக்குவாங்க சார்,

amudu

கள்ளநோட்டுகளை மாற்றுவதை விட கடினமானது, அரசு வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்களை மாற்றுவது

சரவணன். ℳ

ஆட்சியில் 24 ஊழல்கள்னு சொல்லி புகார் கொடுக்கறோம்...அப்புறம் அவங்க கூடவே கூட்டணி வச்சு 23 சீட்டும் வாங்கறோம்...

பாஸ்...அப்ப நாம காட்டியும் கொடுக்கறோம், கூட்டியும் கொடுக்குறோமா பாஸ் ...!

amudu

மாஸ்கே போடாத ஊரில், மாஸ்க் போட்டவங்க கோமாளி.

நாகராஜ சோழன் MA.MLA

டேய்,மச்சா பைக் கொஞ்ச நேரம் குடுடா...

மி ~

எனக்கு உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,

PetrolPriceHike

mohanram.ko

நல்ல காய்கறியா பொறுக்கி எடுத்த பிறகு, விலை படியாம திருப்பி கொடுப்பது தான் 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம' போறது

PrabuG

ஒரு நாள் முதல்வர் மாதிரியே, மக்களை ஒரு மாத முதலாளியாக பாவிக்கும் திட்டத்திற்கு பெயர் தேர்தல்!!

ச ப் பா ணி

Fan ல இருந்து சத்தம் மட்டும் தான் காற்று வரமாட்டீங்கிதே

வெயில்காலம் ஸ்டார்ட்

மயக்குநன்

கருணாநிதியின் சக்கர நாற்காலியைத் தள்ளியவன் நான்!- கமல்ஹாசன்.

சினிமாவில் கூட இந்த அளவுக்கு நீ 'பல்டி' அடிச்சதில்லையே மேன்..?!

கோழியின் கிறுக்கல்!!

குழந்தைகளுக்கு தோத்தா வெட்கப்படணும் வருத்தப்படணும் சொல்லிக் குடுக்காதீங்க!!!

தொடச்சிட்டு போகணும்னு சொல்லிக் குடுங்க!!!

- லாக் ஆஃப்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 28 பிப் 2021