மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

வெளிநாட்டில் ஷூட்டிங், என்ன ஜானர், லுக் டெஸ்ட் ; விஜய் 65 அப்டேட்!

வெளிநாட்டில் ஷூட்டிங், என்ன ஜானர், லுக் டெஸ்ட் ; விஜய் 65  அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. அடுத்ததாக, விஜய் 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் குறித்த முக்கிய அப்டேட் கிடைத்திருக்கிறது.

‘விஜய் 65’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருக்கிறதாம். அதோடு, இந்தப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலில் துவங்கவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறது. கொரோனா சிக்கல்களெல்லாம் அதற்குள் முடிந்துவிடும் என படக்குழு முழுமையாக நம்புகிறதாம். அதோடு, நெல்சன் இயக்குவதால் காமெடி ஜானரில் படம் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால், நமக்குக் கிடைத்த தகவல் படி , முழுக்க முழுக்க சீரியஸான அரசியல் திரைப்படமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 06ஆம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் ரஷ்யா கிளம்ப படக்குழுத் திட்டமிட்டிருந்தது. தற்பொழுது தேர்தல் தேதி உறுதியாகிவிட்டதால், ஓட்டு பதிவினை முடித்துவிட்டு விஜய் படப்பிடிப்புக்கு கிளம்புவார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு, விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல். புதியதாக, இன்னொரு தகவல் என்னவென்றால், ஏற்கெனவே படத்துக்கான லுக் டெஸ்டினை முடித்திருந்தார் விஜய். தற்பொழுது, இன்னொரு லுக் டெஸ்டினையும் முடித்திருக்கிறார். ஏனெனில், படத்தில் இரண்டு லுக்-களில் வருவார் என்றும் சொல்கிறார்கள்.

படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தமாகியிருக்கிறார். அதுபோல, அனிருத் இசையமைக்கிறர். பான் இந்தியா திரைப்படமாக விஜய் 65 உருவாக இருக்கிறது.

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

ஞாயிறு 28 பிப் 2021