மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

விஜய்சேதுபதியை விட்டு வெளியே வந்த இயக்குநர் நலன் !

விஜய்சேதுபதியை விட்டு வெளியே வந்த இயக்குநர் நலன் !

நான்கு இயக்குநர்கள் இயக்க, நான்கு கதைகளோடு கடந்த வாரத்தில் திரையரங்கில் வெளியான ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி’. காதலும் காதல் நிமித்தமாக ஒவ்வொரு கதையும் உருவாகியிருந்தது. நான்கு கதைகளில் சிறந்த கதையென்றால் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான கதைதான். இதில் ஹீரோவாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். மற்ற கதைகளுக்கெல்லாம் பலத்த விமர்சனங்கள் எழுந்தன.

‘சூதுகவ்வும்’, ‘காதலும் கடந்துபோகும்’ படங்களை இயக்கியவர் தான் நலன் குமாரசாமி. குட்டி ஸ்டோரி கொடுத்த வரவேற்பால், அடுத்தப் படத்துக்கு தயாராகிவிட்டார். இவரின் அடுத்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

நலனின் எல்லா படத்திலும் விஜய்சேதுபதி இருப்பார். தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் திரைக்கதையாசிரியராக பணியாற்றியதும் விஜய்சேதுபதியின் ஸ்கிரிப்டுக்காக தான். சேதுபதியைத் தாண்டி புது ஹீரோவுடன் இந்த முறை கூட்டணி சேர்கிறார் நலன். அதாவது, நலன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க இருப்பது உறுதியாகியிருக்கிறது. படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மற்ற நடிக நடிகையர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு போய்க்கொண்டிருக்காம்.

ஆர்யாவுக்கு அடுத்த ரிலீஸ் டெடி. காதல் மனைவி சாயிஷாவுடன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை சக்தி செளந்தர்ராஜன் இயக்கியிருக்கிறார். நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை படமும் ரிலீஸூக்கு தயாராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

ஞாயிறு 28 பிப் 2021