மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 பிப் 2021

கார்த்தியின் சுல்தான் டிவி உரிமை யாருக்கு, எத்தனை கோடி ?

கார்த்தியின் சுல்தான் டிவி உரிமை யாருக்கு, எத்தனை கோடி ?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவாகியிருக்கும் படம் சுல்தான். கார்த்திக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகும் படம் இது.

சுல்தான் படமானது திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்றே ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அதோடு, படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி ஓடிடியில் வெளியிடலாம் என்று திட்டமிட்டார்கள். ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டது. வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்கில் வெளியாவது உறுதியாகிருக்கிறது.

கைதி, மாஸ்டர் படங்களில் பணியாற்றிய சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், விவேக் மெர்வின் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை, ஆந்திரா விநியோக உரிமை உள்ளிட்டவற்றை விற்கும் பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. அப்படி, தமிழில் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது.

கார்த்தியின் லேட்டஸ்ட் ஹிட்டான கைதி படம் கூட விஜய் டிவி வசம் தான் இருக்கிறது. இந்நிலையில், சுல்தான் படம் 8.25 கோடிக்கு விஜய்டிவிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் கடந்த 2019ல் தேவ், கைதி, தம்பி படங்கள் வெளியானது. இதில் கைதி தம்பி படங்கள் மிகப்பெரியளவில் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சனி 27 பிப் 2021