மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 பிப் 2021

கசிந்த மாதவனின் ராக்கெட்ரி பட ரிலீஸ் தேதி

கசிந்த மாதவனின் ராக்கெட்ரி பட ரிலீஸ் தேதி

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் ராக்கெட்ரி படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரிலீஸ் தேதி கசிந்துள்ளது.

'அலைபாயுதே' படம் மூலம் தமிழில் ஹேண்ட்சம் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். இதனைத் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படம் அவரின் கனவு திரைப்படம் என்று பல இடங்களின் குறிப்பிட்டிருக்கிறார்.

1994-ல் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதன் பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை பயணம் ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சூர்யா பத்திரிக்கையாளராக நடித்துள்ளதாகவும் அதே கதாபாத்திரத்தில் இந்தி பதிப்பில் ஷாருக்கான் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரம் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார்கள்.சூர்யா ஷாருக்கான் நடிப்பதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து விட்ட நிலையில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 30ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை..

ராக்கெட்ரி திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், ஜார்ஜியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. தமிழ் வெர்ஷனுக்கு ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ என பெயரிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

சனி 27 பிப் 2021