மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 பிப் 2021

இவர் படத்திலுமா? எந்த இயக்குநரையும் விட்டுவைக்காத விஜய்சேதுபதி!

இவர் படத்திலுமா? எந்த இயக்குநரையும் விட்டுவைக்காத விஜய்சேதுபதி!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என இந்தியாவின் முதன்மையான அனைத்து மொழிகளிலும் படங்களை நடித்துவருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கறார் காட்டாமல், எந்த ரோல் என்றாலும் நடித்துக் கொடுக்கிறார். ஹீரோவாக ஹிட் கொடுப்பது போல மாஸ்டரில் வில்லத்தனம் காட்டி ரசிகர்களை கவர்ந்தார். அதன் நீட்சியாக தெலுங்கில் சமீபத்தில் வெளியான உப்பென்னா படத்திலும் வில்லனாக நடித்து லைக்ஸ் அள்ளினார்.

தற்பொழுது, பாலிவுட் படங்களில் நடித்துவருகிறார் சேதுபதி. அதற்காக மும்பையில் முகாமிட்டிருக்கிறார் . பாலிவுட் ஷூட்டிங் இருக்கும் இந்த நேரத்தில் , இன்னொரு விஷயமொன்றையும் செய்துவருகிறார். தமிழில் எக்கச்சக்கப் படங்களை நடித்துமுடித்துவிட்டார். சில படங்களுக்கு டப்பிங் பணிகள் மட்டும் முடிக்க வேண்டியிருக்கிறது. அப்படி, டப்பிங் முடிக்க வேண்டிய படங்களை மும்பை கொண்டுவர சொல்லியிருக்கார் சேதுபதி. காலையில் பாலிவுட் பட ஷூட்டிங், இரவு தமிழ் படங்களின் டப்பிங் என தீவிர வேகம் காட்டி படங்களை முடித்துவருகிறார்.

விஜய்சேதுபதியின் படங்களின் லிஸ்டில் புதிதாக ஒரு படமும் இணைந்திருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மிகப்பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. அதனால், பிசாசு படத்தின் இரண்டாம் பாகமான, பிசாசு 2 படத்தைத் துவங்கியிருக்கிறார் மிஷ்கின். இந்தப் படத்தில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். ஆங்கிலோ இந்தியனாக நடிக்கும் அவரின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடக்கிறது. பாலிவுட் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்சேதுபதி அதை முடித்துவிட்டு, நேராக பிசாசு 2வில் நடிக்கச் செல்கிறார். அதுவும், மூன்று நாட்கள் கால்ஷீட்டில் மிஷ்கின் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துவருகிறார்.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 26 பிப் 2021