மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 பிப் 2021

இந்த சண்டே நேரடியாக டிவியில் வெளியாகும் புதுப்படம்!

இந்த சண்டே நேரடியாக டிவியில் வெளியாகும் புதுப்படம்!

புதிய படமென்றால் நேரடியாக திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்பதே நீண்ட கால கலாச்சாரம். ஆனால், இனிவரும் காலங்களில் அப்படி இருக்காது. நேரடியாக ஓடிடியில் புதுப்படங்கள் வெளியாவது, நேரடியாக டிவியில் புதுப்படங்கள் வெளியாவதெல்லாம் இனிமேல் அதிகமாகும். அதற்கான முகாந்தரங்கள் அதிகமாகிவிட்டது என்பதே உண்மை. இந்த வார ஞாயிற்றுக்கிழமை நேரடியாக தொலைக்காட்சியில் புதிய படமொன்று வெளியாக இருக்கிறது.

சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கியவர் ஹலீதா ஷமீம். இந்தப் படம் கடந்த 2019இல் ஆந்தாலஜியாக நான்கு கதைகளுடன் திரையரங்கில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, சாரா அர்ஜுன், லீலா சாம்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரிலேஷன்ஷிப் குறித்த கதைகளுடன் படம் இருந்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிட்டது.

சில்லுக்கருப்பட்டி தந்த ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ஏலே. சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் நடிப்பில் தந்தை மகன் பாசத்தை மையமாகக் கொண்டு நாஸ்டாலஜிக் நினைவுகளோடு படம் உருவாகியிருக்கிறது. காதலர் தின ஸ்பெஷலாக கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது.

இந்தப் படத்தை தயாரித்த ஒய்நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்துடன் திரையரங்கத்தினருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நேரடியாக டிவியில் வெளியாகிறது. திரையரங்கில் வெளியாகி 30 நாட்கள் வரையிலும் எந்த ஓடிடி தளத்திலும் படத்தை வெளியிடக் கூடாது என ஒப்பந்தம் போட வேண்டும் என திரையரங்குகள் கேட்டுக்கொண்டது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத தயாரிப்புத் தரப்பானது நேரடியாக டிவி ரிலீஸை உறுதி செய்தது.

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கலாச்சாரம் தற்போது நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. பொங்கல் தினத்தன்று விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் 'புலிக்குத்தி பாண்டி' படம் சன் டிவியில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த வரிசையில் 'ஏலே' படமும் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகிறது.

இந்தப் படம் பிப்ரவரி 28ஆம் தேதியான வருகிற ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதற்கான புரோமோ வீடியோக்களை டிவியில் ஒளிபரப்பத் தொடங்கிவிட்டனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியிருக்கும் ‘டெடி’ படமும் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. இந்தப் படமும் ஓடிடியில் வெளியானப் பிறகு, நேரடியாக டிவியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வெள்ளி 26 பிப் 2021