மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

விஜய் 65 ஒளிப்பதிவாளர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

விஜய் 65 ஒளிப்பதிவாளர் சொன்ன ஹேப்பி நியூஸ்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய்யின் அடுத்தப் படமான விஜய் 65 குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், கலாநிதிமாறன், நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் ஆகியோர் இருக்கும் ஒரு காணொளி மூலம் விஜய் 65 குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இறுதியில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. தற்போது படத்தின் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் ஆனது உறுதியாகியுள்ளது.

மனோஜ் பரமஹம்சா விண்ணைத்தாண்டி வருவாயா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ராதே ஷியாம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.விஜய் 65 படத்திற்கு தான் ஒளிப்பதிவு செய்ய உள்ளதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``விஜய்யுடன் அடுத்த பயணத்தில் இணையவிருக்கிறேன். தமிழகமே கொண்டாடும் நாயகன் விஜய் விரைவில் இந்தியா முழுதும் கொண்டாடப்படுவார். ஆம், தளபதி 65 ஓர் இந்தியப்படமாக உருவாகி வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாஸ்டர் போன்று இத்திரைப்படமும் தென்னிந்திய மொழிகளோடு இந்தியிலும் வெளியாகும்.

- ஆதினி

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வியாழன் 25 பிப் 2021