மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

மாரி இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு... எகிறும் தனுஷின் பட லிஸ்ட்!

மாரி இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு... எகிறும் தனுஷின் பட லிஸ்ட்!

தனுஷ் நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸூக்குத் தயாராக இருக்கிறது. மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 09ஆம் தேதி தியேட்டரிலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ நேரடியாக ஓடிடியிலும் வெளியாக இருக்கிறது. அதன்பிறகு, பாலிவுட்டில் அக்‌ஷய்குமார் மற்றும் சாரா அலிகானுடன் நடித்திருக்கும் ‘அட்ராங்கி ரே’ படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.

அடுத்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘தனுஷ் 43’ படம் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தனுஷூக்கு நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். சமுத்திரகனி, ஸ்ம்ருத்தி வெங்கட், கிருஷ்ணக்குமார், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்துக்கு நடுவே ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் ஹாலிவுட் படமான க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பில் தற்பொழுது கலந்துகொண்டிருக்கிறார் தனுஷ். இவ்விரண்டு படத்தையும் மாறி மாறி நடித்து முடிக்க இருக்கிறார் தனுஷ்.

சொல்லப் போனால் ‘தனுஷ் 43’ படமாக இயக்குநர் ராம் குமார் இயக்கும் படம் தான் இருந்திருக்க வேண்டும். படத்தின் பட்ஜெட் மற்றும் கதையின் காரணமாக படம் தள்ளிப் போகிறது. எந்த அளவுக்கு என்றால் இன்னும் இரண்டு படங்களை தனுஷ் முடித்துவிட்டுதான், ராம் குமார் படத்தை துவங்குகிறார்.

அதிலொன்று, செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் ‘நானே வருவேன்’. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் பணிகளைத் துவங்கிவிட்டார் செல்வா. இந்தப் படத்தின் அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்டது. தற்பொழுது, தனுஷ் நடிக்கும் மற்றுமொரு புதுப் படம் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது.

தனுஷ் நடிப்பில் மாரி மற்றும் மாரி 2 படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் படங்களை முன்னதாக இயக்கியவர். சின்ன பட்ஜெட்டில் தனுஷூக்கு பக்கா கமர்ஷியலாக மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படம் வேண்டுமென்றால் பாலாஜி மோகனை டிக் செய்வார் தனுஷ். அப்படி, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தை பாலாஜி மோகன் இயக்க ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தை முடித்த கையோடு, பாலாஜிமோகன் படம் உடனடியாகத் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகுதான், செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படமும், அதைத்தொடர்ந்து ‘ராட்சசன்’ இயக்குநர் ராம் குமார் படமும் உருவாகும். இதுதான், இப்போதைக்கு உறுதியாகியிருக்கும் தனுஷ் படம் அப்டேட்ஸ்!

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வியாழன் 25 பிப் 2021