மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

விஜய்சேதுபதியின் பாலிவுட் படத்துக்கு இப்படியொரு டைட்டிலா?

விஜய்சேதுபதியின் பாலிவுட் படத்துக்கு இப்படியொரு டைட்டிலா?

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் படத்திற்கு வித்தியாசமான ஒரு தலைப்பைத் தேர்வு செய்துள்ளது படக்குழு.

ஹீரோவாக மட்டுமின்றி சிறந்த குணச்சித்திர நடிகராக தன்னை முன்னிறுத்தி வரும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் கால்பதித்துள்ளார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் "மும்பைகார்" படத்தில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இது தமிழில் வெளியாகி ஹிட் அடித்த மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். தமிழில் முனிஸ்காந்த் நடித்த ரோலில், பாலிவுட்டில் நடிக்கிறார். இப்படம் மட்டுமின்றி, காந்தி டாக்கீஸ் படத்திலும் நடித்துவருகிறார் சேதுபதி.

அடுத்ததாக பிரபல இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கவிருக்கும் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்கவிருக்கிறார்.

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மார் குர்ரானா நடிப்பில் வெளியான அந்தாதூன் படம் பெரும் பாராட்டுகளை பெற்றதால், விஜய் சேதுபதியின் இந்த திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இத்திரைப்படம் திரில்லர் படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் தொடங்க உள்ள நிலையில் இன்று படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு "மேரி கிறிஸ்துமஸ்" என்று பெயரிட்டுள்ளனர்.

மொத்தமாக 90 நிமிடங்கள் தயாராகும் இந்தப் படத்தை எந்த வித இடைவெளியும் இன்றி திரையிடவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 25 பிப் 2021