மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

14 வயசுல ஓட்டு போடமுடியாதா? :அப்டேட் குமாரு

14 வயசுல ஓட்டு போடமுடியாதா? :அப்டேட் குமாரு

அன்புள்ள முதல்வருக்கு வணக்கம்... நாங்கள் 9,10, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்ல சுமாரா 5 லட்சம் பேருக்கு மேல இருப்போம். இன்னிக்கு ஸ்கூல்ல உட்கார்ந்திருப்பதான் உங்க ஆல் பாஸ் அறிவிப்பைக் கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டோம்.எங்களுக்கு இன்னொரு முக்கியமான கோரிக்கை இருக்கு. இந்தியாவுல ஓட்டு போடுறதுக்கு வயது 18தான்னு ஒரு சட்டம் இருக்குதாம். உடனே அதை திருத்தி 14 வயசுலேர்ந்து எல்லாரும் ஓட்டுப் போடலாம்னு உடனே மோடி அய்யாகிட்ட சொல்லி ஒரு சட்டம் கொண்டார சொல்லுங்க. மீம்ஸ் மூலமா உங்களுக்கு நன்றி சொல்தை விட ஓட்டு மூலமா உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். இப்படிக்கு கொரோனாவால் அடிபட்டு பரிட்சையால் அடிபடாத மாணவன்.

ச ப் பா ணி

படமே தெரியாமல் புள்ளிகளை வெறித்துப் பார்த்த நாட்களின் டிவி சுவாரஸ்யத்தை இன்று 250 சேனல்களிலிருந்தும் பெற முடியவில்லை!"

-நாயோன்

Delta Tamilian

கி.மு. கி.பி மாதிரி மோடிக்கு முந்தைய இந்தியா,மோடிக்கு பிந்தைய இந்தியா என வரலாறு எழுதப்படும்.

துயிலன்

புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருகிறது - பிரதமர் மோடி

இவர் பிரதமரா இல்லை வானிலை அறிவிப்பாளரா?

நாகராஜ சோழன் MA.MLA

கொரோனா காலத்தில் ~

10 ஆவது தேர்வு வேணும்னு சொல்லி கோர்ட்டுக்கு போவோம்...

தேர்தல் காலத்தில் ~

9,10,11 தேர்வு இல்லாம ஆள் பாஸ் போடுவோம்...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

ℳsd↬இதயவன்↫

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது அவசியம் ~ பிரதமர் மோடி

அம்பானிக்கும் அதானிக்கும் அவசிய பட்டத நாங்க கேட்டோமா?!!

தர்மஅடி தர்மலிங்கம்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது - ஜெயக்குமார்!

"பலமாக" உள்ளதா "பலவீனமாக" உள்ளதா.??

ச ப் பா ணி

பெட்ரோல் டீசல் விலை ஏறலைனு நிம்மதியாய் இருந்தா.. கேஸ் விலை ஏறிடுச்சு..

டெய்லியும் vibrate mode லயே வச்சிருக்காங்க

mohanram.ko

அரசியல்வாதிகள்-நாங்கள் செய்ததையெல்லாம், மக்கள் 'எண்ணி' பார்க்க வேண்டும்

மக்கள்- நீங்க செஞ்சதுக்கு, நாங்க ஏன் கம்பி 'எண்ணனும்'?

ரமேஷ் ஏழுமலை

ஓடிட்டு இருக்க டிவிய பத்தி கேட்டு, ஓடாம தூக்கி போட்ட மிக்சிய நியாபகபடுத்திட்டீங்களே குமாரு

மயக்குநன்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மோட்டேரா மைதானத்தின் பெயர் 'நரேந்திர மோடி மைதானம்' எனப் பெயர் மாற்றம்!

அதுசரி... நம்ம எல்லோருடைய வாழ்க்கையிலும்தான் 'விளையாடிட்டு' இருக்காரே..?!

மெத்த வீட்டான்

சசிகலா வெற்றிடத்தை நிரப்புவார் - பாரதிராஜா #

நீங்க வடிவேலு வெற்றிடத்தை நிரப்புவிங்க போல !

ஜால்ரா காக்கா

சசிகலாவை குற்றவாளி என சொல்வதே பைத்தியகாரத்தனம்

-Traffic Ramasamy.

~ஜோக்கர் படம் பார்த்துட்டு இந்த ஆளுக்கு சில்லறைய எல்லாம் சிதற விட்டேன்

கோழியின் கிறுக்கல்!!

பேனா கடன் வாங்குவதை விட, போன் சார்ஜர் கடன் வாங்குவது அதிகரித்து விட்டது!!

-லாக் ஆஃப்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வியாழன் 25 பிப் 2021