மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

ஜெயலலிதா பயோபிக் : தலைவி ரிலீஸ் தேதி!

ஜெயலலிதா பயோபிக் : தலைவி ரிலீஸ் தேதி!

பாலிவுட் நடிகை கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘தலைவி’. இந்தப் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்தப் படத்தை மதராசபட்டினம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், இந்தி மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளான நேற்று படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. கங்கனா தனது ட்விட்டரில், "மிகப்பெரிய ஆளுமையான ஜெயா அம்மாவிற்கு இத்திரைப்படம் சமர்ப்பணம். இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், எம்.ஜி.ஆர் ரோலில் அரவிந்த்சாமி , சோபன்பாபு ரோலில் ஜிஷ்ஷூ செங்குப்தா, சசிகலா கேரக்டரில் பூர்ணா, ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் மது, ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவாக பாக்யஸ்ரீ, ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துவருகிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலை தமிழகம் எதிர்நோக்கி வரும் நிலையில், ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமானது வெளியாவது பெரியளவில் அதிர்வலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அதோடு, தலைவி திரைப்படத்தின் மோஷன் போஸ்டரையும் கங்கனா வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட போஸ்டர்களில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமியின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இத்திரைப்படம் விஷ்ணுவர்தன் இந்துரி தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க பலர் ஆர்வம் காட்டினர்.

சமீபத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ‘குயின்’ என்னும் வெப் சீரிஸ் வெளியானது. அதோடு், பிரியதர்ஷினி இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பில் "தி அயன் லேடி" என்னும் பயோபிக் உருவாகி வருவதும் கூடுதல் தகவல்.

- ஆதினி

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

வியாழன் 25 பிப் 2021