மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

இயக்குநராக ‘துப்பறிவாளன் 2’வில் விஷாலின் புது முடிவு !

இயக்குநராக ‘துப்பறிவாளன் 2’வில் விஷாலின் புது முடிவு !

போராட்டங்களைத் தாண்டி விஷாலுக்கு சக்ரா திரையரங்கில் வெளியாகிவிட்டது. விஷாலுக்கு நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். ஆனந்தன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப்

படத்துக்கு மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பே கிடைத்திருக்கிறது.

விஷாலுக்கு அடுத்த ரிலீசுக்கு தயாராகிவரும் படம் எனிமி. ஆர்யாவுடன் நடிக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பையும் சமீபத்தில் முடித்துவிட்டார்.

விஷால் நடிப்பில் நீண்ட நாளாக தயாராகிவரும் மற்றுமொரு படம் ‘துப்பறிவாளன் 2’ மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படம் செம ஹிட். அதனால், இரண்டாம் பாகத்தை உருவாக்க நினைத்தது படக்குழு. இந்நிலையில் விஷால் தயாரிக்க மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் துவங்கியது.

லண்டன் படப்பிடிப்பின் போது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். இயக்குநர் மிஷ்கின் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்கவில்லை என்பதில் துவங்கி பெரிய பிரச்னைகளாகி போலீஸ் கேஸ் வரை சென்றது நினைவுகூறத்தக்கது. மிஷ்கின் - விஷால் பிரச்னையின் காரணத்தால், துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கும் பொறுப்பினையும் விஷாலே எடுத்துக் கொண்டார்.

புது அப்டேட் என்னவென்றால், ‘துப்பறிவாளன் 2’ படத்துக்கான கதையை மீண்டும் புதுப்பித்து, விஷாலுக்கு ஏற்றது போல ஸ்கிரிப்டினை மாற்ற இருக்கிறதாம் விஷாலின் கதை இலாகா. ஸ்கிரிப்டினை ரீ ஒர்க் செய்த பிறகு மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்ல திட்டம். விஷாலின் திரையுலக பயணம் உதவி இயக்குநராக துவக்கியது தான். அதன்பிறகே நடிகரானார். அதனால், காலத்தின் கட்டாயத்தால் இயக்குநராகிறார் விஷால்.

லண்டனில் லாக்டவுன் நிலவுவதால், தளர்வு ஏற்பட்டதும் லண்டனில் மீதிப் படப்பிடிப்பை முடிக்க படக்குழு செல்ல இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆர்யாவுடன் நடிக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்புக்காக தற்பொழுது துபாய் சென்று படப்பிடிப்பை முடித்து திரும்பினார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வியாழன் 25 பிப் 2021