மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

பிரசாந்த்தை இயக்க விரும்பாத ஜோதிகா பட இயக்குநர்... சிக்கலில் அந்தகன்!

பிரசாந்த்தை இயக்க விரும்பாத ஜோதிகா பட இயக்குநர்... சிக்கலில் அந்தகன்!

இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அந்தாதூன். இந்தப் படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆயுஷ்மான். நெகட்டிவ் ரோலில் தபு நடித்திருப்பார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது படம்.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய நடிகர் தியாகராஜன் படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க, ‘அந்தகன்’ என்கிற பெயருடன் படம் தொடங்கியது. இதற்கான அறிவிப்பு புத்தாண்டு அன்று வெளியானது.

ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார்கள். அதோடு, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதோடு, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை முதலில், இயக்க மோகன்ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில பல காரணத்தில் இவர் படத்திலிருந்து விலகிவிட்டதால் இறுதியாக, ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஃபெட்ரிக் இயக்க ஒப்பந்தமானார்.

புத்தாண்டு அன்று படத்தின் போஸ்டர் வெளியானபோதே, கோடையில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றே தெரிகிறது. இந்தப் படத்தில் இயக்குநராக ஒப்பந்தமான ஃபெட்ரிக் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது. என்ன காரணம் என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை. பொதுவாக, தியாகராஜன் தயாரிக்கும் படத்தில் பணியாற்றுவதே பெரிய சவால் என்று சொல்வார்கள். கூடுதலாக, தியாகராஜன் கொடுக்கும் உளவியல் அழுத்தம்தான் காரணம் என்றும் சொல்கிறார்கள். அதனால், படப்பிடிப்பு தொடங்குவதிலேயே சிக்கல் என்று சொல்கிறார்கள். இந்தப் படத்துக்காக உடல் எடை குறைத்து ஃபிட்னஸ் ஆனார் பிரசாந்த். ஆனால், இவர் நடிக்க அந்தகன் எப்போது உருவாகும் என்பது யாருக்குமே தெரியவில்லை.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 24 பிப் 2021