மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

இனி தியாக நகர் என்றே அழைக்கப்படும்: அப்டேட் குமாரு

இனி தியாக நகர் என்றே அழைக்கப்படும்: அப்டேட் குமாரு

இன்னிக்கு தி.நகர்ல வண்டி ஓட்டவே முடியலை. வழக்கத்தை விட கூட்டம் அதிகம். என்னானு விசாரிச்சா ஒருபக்கம் ஜெயலலிதா பொறந்தநாளுக்காக சசிகலா வீட்டுக்கு போற கூட்டம், இன்னொருபக்கம் அறிவாலயத்துக்கு விருப்ப மனு போடப் போற கரைவேட்டிகள் கூட்டம்னு தாங்க முடியலை. இந்த டிராபிக்கை கூட தாங்கிப்பேன்.. ஆனால் என்னோட சசிகலா ஆதரவு நண்பர் ஒருத்தரு, ‘தியாகத் தலைவி தியாகராயர் நகர்ல இருக்குறது எவ்வளவு பேர் பொருத்தம் பாத்தியா. இனி இதை தி.நகர்னு சொல்லக் கூடாது. தியாகநகர்னுதான் சொல்லணும்’னு ஒரு வேண்டுகோள் வச்சார். நான் எப்படி தாங்குவேன்...

நீங்க அப்டேட் பாருங்க

amudu

தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என பாமக தலைமை முடிவு.

உங்க கட்சிக்கே தனிப்பட்ட செல்வாக்கு இல்லாமல் கூட்டணியில் தானே போட்டி இடுது.

சரவணன். ℳ

ஜெயக்குமார் ~ ஈபிஎஸ் ஆளுக்கு ஒரு ஒன் லேக் கொடுத்து விடுங்க...

எடப்பாடி ~ எதுக்கு, என்ன இவ்வளவு கூட்டம்...?

ஜெயக்குமார் ~ எல்லோரும் கலைஞர் கொடுத்த டிவியோட வந்திருக்காங்க...இப்ப வரைக்கும் நல்லா தான் ஓடுதாம்...

K.Dhakshinamoorthy

சரக்கு விற்ற அரசுக்கே இவ்வளவு கடன் இருக்குன்னா ?

குடிச்ச குடிகாரங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கும்?

பாலசுப்ரமணி

"வெற்றி நடை போடும் தமிழகமே"

"வெற்றி நடை எங்கம்மா போடுது. வட்டிக்கு வாங்குன கடன் தான் கூடுது"

ரஹீம் கஸ்ஸாலி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குனர் நியமனம்!

.ஒத்த செங்கலுக்கு எல்லாமுமா நிர்வாக இயக்குநர் நியமிப்பீங்க?!

நாகராஜ சோழன் MA.MLA

மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன்!- முதல்வர் பழனிசாமி.

பிரச்சனையை தீர்த்து வைக்க சொல்லி போராட்டம் பண்ணினா தான் வாய்லயே சுடரீங்களே...

ச ப் பா ணி

ஜாதியை ஒழிப்போம்னு சொன்னால் அரசியல்வாதி ஆகப்போறாங்கனு அர்த்தம்

ஊழலை ஒழிப்போம்னு சொன்னால் அரசியல்வாதி

ஆகிட்டாங்கனு அர்த்தம்

நாகராஜ சோழன் MA.MLA

அடுத்தவர்களின் குறைகளை சுட்டி காட்டினாலே

நீங்கள் புத்திசாலி என நினைத்து கொள்கிறீர்கள்.

- ஓஷோ.

மயக்குநன்

மிரட்டி பணம் பறிக்கும் அரசியல் இருக்கும்வரை, மேற்கு வங்கத்தில் வளர்ச்சி சாத்தியமில்லை!- மோடி.

மிரட்டி எம்பி, எம்எல்ஏக்களை பறிக்கிற அரசியல் இருந்தாதான் வளர்ச்சி சாத்தியம் போல..?!

கோழியின் கிறுக்கல்!!

பஸ்ல சில்லரைக்கு காத்திருப்பதும், பொது இடத்தில் கைப்பேசிக்கு சார்ஜ் போட்டு காத்திருப்பதும் ஒன்று தான்!

திரும்ப திரும்ப பார்த்துட்டே இருக்க வேண்டியதாக இருக்கு!!

-லாக் ஆஃப்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

புதன் 24 பிப் 2021