மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

வடிவேலு தான் வர்ராரு.. மீண்டும் நடிக்கப் போறாரு..!

வடிவேலு தான் வர்ராரு.. மீண்டும் நடிக்கப் போறாரு..!

சமீபத்தில் திரைத்துறை நடிகர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு ஒன்று நடந்தது. அதில், ஒரு வருடமாக லாக்டவுன் காரணமாக படம் இல்லாமல் இருக்கிறோம் என நடிகர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, வடிவேலு பதிலுக்கு ஒன்று சொன்னார். பத்து வருஷமா நான் லாக் டவுனில் இருக்கிறேன் என்று சொன்னது நடிகர்கள் மத்தியில் பரபரப்பான நிகழ்வானது. பட வாய்ப்பு இல்லாமல் மிகுந்த வேதனையுடன் இருந்தாலும், ஜாலியாக சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் வடிவேலு..

வருடத்திற்கு பத்து பதினைந்து படங்கள் என கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு கடைசியாக 2017ல் விஜய்யுடன் மெர்சல் படம் வெளியானது. அதன்பிறகு, எந்தப் படமும் நடிக்கவில்லை. இவர் நடிப்பதாகச் சொல்லப்பட்ட இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ன ஆனதென்றே தெரியவில்லை. வெப் சீரிஸ் ஒன்று நடிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார் அதுவும் நடக்கவில்லை. சமீபத்தில் கூட, சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ படத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் உண்மையில்லை என்றே சொல்கிறார்கள்.

இந்நிலையில், மீண்டும் காமெடி நடிகராக திரையில் கலக்க இருக்கிறார் வடிவேலு. திருமுருகன் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. மெட்டி ஒலி, கல்யாண வீடு உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களை இயக்கியவர் திருமுருகன். எம் மகன் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். பரத், கோபிகா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் வடிவேலு காமெடி செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

வடிவேலு - திருமுருகன் காம்போவில் வெளியான பரத் நடித்த விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் கூட காமெடியில் பட்டாசாக இருக்கும். இப்போது, இந்த கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 24 பிப் 2021