மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

தனுஷ் கட்டும் வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

தனுஷ் கட்டும் வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

தனுஷ் புதிதாக கட்டும் வீட்டின் பூமி பூஜையானது சமீபத்தில் நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் ரஜினி கலந்துகொண்டப் புகைப்படங்களும் கூட வைரலானது. போயஸ்கார்டனில் ரஜினியின் வீட்டருகில் தான் தனுஷ் வீடு கட்டுகிறார்.

தற்பொழுது, ஆழ்வார்பேட்டையில் குடியிருப்புப் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார் தனுஷ். ரஜினியின் வீட்டருகில் தனுஷ் வீடு வாங்க காரணமும் சொல்லப்பட்டது. என்னவென்றால், ரஜினிக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பேரக்குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா இருவரையும் சந்திக்கவும், அதோடு, ஐஸ்வர்யாவும் ரஜினியைக் கவனித்துக் கொள்ள அடிக்கடி போயஸ் தோட்டத்துக்கு வரவேண்டியிருக்கிறது. இந்தக் காரணத்திற்காக ரஜினியின் வீட்டருகிலேயே வீடு கட்டிவருகிறார் தனுஷ். எப்படியும் நவம்பர் மாதத்துக்குள் வீடு கட்டி முடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

நடிகர்கள் கட்டும் வீட்டின் மதிப்பானது அவர்களுக்கு பெருமிதமான ஒன்றாக எப்போதுமே பார்க்கப்படும். சமீபத்தில் 120 கோடியில் விஜய் வீடு கட்டினார். அதுபோல, 140 கோடியில் அஜித் வீடு கட்டினார் எனச் சொல்லப்படும். அந்த மாதிரி, வீட்டினை சுமார் 80 கோடி பட்ஜெட்டில் கட்டிவருகிறாராம் தனுஷ். பெரிய தொகையில் வீடு கட்டுவதால் தான், முன்னரே சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் வி கிரியேஷன்களுக்கு அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். தனுஷைப் போல, விஜய்சேதுபதியும் பெரும் தொகையில் வீடு கட்டிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதியுமே வீட்டுக்காக பெரும் தொகையைப் பயன்படுத்துவதால் தான் இரவுபகலாக அதிகப் படங்கள் கமிட்டானார் என்றும் சொல்கிறார்கள்.

தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மூன்று படங்கள் ரிலீஸாக இருப்பது உறுதியாகியிருக்கிறது. தமிழில் கார்த்தில் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படமானது நெட்ஃப்ளிக்ஸிலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ திரையரங்கிலும் வெளியாகிறது. அதோடு, இந்தியில், அக்‌ஷய்குமாருடன் நடித்திருக்கும் அட்ராங்கி ரே படமும் வெளியாக இருக்கிறது.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

புதன் 24 பிப் 2021