மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

இந்தியாவின் முதல் பகல் - இரவு டெஸ்ட் இன்று ஆரம்பம்!

இந்தியாவின் முதல் பகல் - இரவு டெஸ்ட் இன்று ஆரம்பம்!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்தில் இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் ஆட்டமாக இன்று (பிப்ரவரி 24) 2.30 மணிக்குத் தொடங்குகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்தில் இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் ஆட்டமாக இன்று (பிப்ரவரி 24) 2.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்த போட்டி நடக்கும் மோடேரா சர்தார் பட்டேல் ஸ்டேடியம் இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளது.

63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.800 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த ஸ்டேடியம், ஒரு லட்சத்து 10,000 இருக்கை வசதியைக் கொண்டது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற பெருமையைப் பெறுகிறது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (90,000 ரசிகர்கள் இருக்கை) உலகின் பெரிய ஸ்டேடியமாக இருந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 50 சதவிகிதம் அளவுக்கே ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. இதனால் 55,000 ரசிகர்கள் வரை போட்டியை நேரில் கண்டுகளிப்பார்கள்.

மின்னொளியில் அரங்கேறும் பகல் இரவு போட்டி என்பதால் வழக்கமான சிவப்பு நிற பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பந்து பயன்படுத்தப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது டிராவாவது செய்தாக வேண்டும். அந்த வகையில் இந்த டெஸ்ட் இந்தியாவுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

புதன் 24 பிப் 2021