மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

இந்தியில் ரீமேக் ஆகும் தமிழில் ஓடாத விக்ரம் படம்!

இந்தியில் ரீமேக் ஆகும் தமிழில் ஓடாத விக்ரம் படம்!

புதுப்புது முயற்சிகள், புதுப்புது கெட்டப்புகளைத் தேடிப்பிடித்து நடிக்கும் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவின் பல கெட்டப் நடிகர் என்றே சொல்லலாம். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்க வெளியான படம் இருமுகன். ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 2016இல் வெளியான இந்தப் படத்தில் விக்ரமுடன் நித்யா மேனன், நயன்தாரா நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் வில்லனும் விக்ரமே, ஹீரோவும் விக்ரமே. வில்லனாக லவ் எனும் கேரக்டரில் நடித்திருந்தது பெரிய வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் படம் தமிழில் பெரிதாக வெற்றியைப் பெறவில்லை. ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்களெல்லாம் நல்ல ஹிட்டானது.

தமிழிலிருந்து பல படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. அந்த வரிசையில் இருமுகன் படமும் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. தமிழில் இயக்கிய ஆனந்த் சங்கர்தான் இந்தியிலும் ரீமேக் செய்ய இருக்கிறார். தற்போது விஷால் - ஆர்யா நடிக்க எனிமி படத்தை இயக்கிவருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு துபாய் செல்ல இருக்கிறது படக்குழு. எப்படியும் 20 நாட்களில் படப்பிடிப்பை முடித்து படத்தை முடிக்க இருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, இருமுகன் படத்தின் ரீமேக்கை கையில் எடுக்கிறார் ஆனந்த் சங்கர்.

தமிழிலேயே பெரிதாக வெற்றியைப் பெறவில்லை, இருப்பினும் இந்தியில் ஏன் ரீமேக் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும், பாலிவுட் ரசிகர்களுக்கு இருமுகன் ஒருவேளை பிடிக்கலாம்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

புதன் 24 பிப் 2021