மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

ஹெல்மெட் வாக்கு வங்கி: அப்டேட் குமாரு

ஹெல்மெட் வாக்கு வங்கி: அப்டேட் குமாரு

தமிழ்நாடு பூராவும் ஹெல்மெட் வசூல் அதிகமாகிடுச்சுனு டூவீலர் ஓட்டுற நண்பர்கள் புலம்ப ஆரம்பிச்சிருக்காங்க. இப்பத்தான் வெயில் சூடேற ஆரம்பிச்சிருக்கு. அதனால பல பேரு ஹெல்மெட்டை குழந்தை மாதிரி டூவீலர் மடியில வச்சி தூக்கிட்டுப் போறாங்க. ஆனா கண்டவுடன் காசுங்குறதுதான் நம்ம போக்குவரத்து போலீசாரின் பழக்கமாச்சே.

‘ என்னா சார் திடீர்னு ஹெல்மெட் வசூல் ஆரம்பமாயிடுச்சு, தேர்தல் நேரத்துல இப்படில்லேம் பண்ணா ஓட்டு போட மாட்டாங்களே?’னு ஒரு போலீஸ்கார்கிட்ட கேட்டேன். ‘நீ ஹெல்ட்மெட் போட்டிருக்கியா போடலயானு பாக்குறது மட்டும்தான் என்னோட வேலை, ஓட்டு போடுவியானு பாக்குறது என் வேலையில்லை’னு தெளிவா சொல்றாரு. ஹெல்மெட் வாக்கு வங்கி உருவாகிடும் போலிருக்கே...

நீங்க அப்டேட் பாருங்க

மயக்குநன்

60 வருடங்களாக சினிமாவில் நடித்துவிட்டு, மக்களைக் காப்பாற்றுவேன் என்று கமல் சொன்னால் நம்பமாட்டார்கள்!- கே.பி.முனுசாமி.

எம்ஜிஆர் மாதிரி 40 வருஷமும், ஜெ. மாதிரி 20 வருஷமும் நடிச்சிட்டு சொன்னாதான் நம்புவாங்க போல..?!

A.P.P.

காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைவுதான்: பாஜக தலைவர் - எல்.முருகன்

இது புதுஉருட்டால்ல இருக்கு?

நாகராஜ சோழன் MA.MLA

பாஜகவின் வேல் யாத்திரை, திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஆட்டம் காணச் செய்துள்ளது!- ராஜ்நாத் சிங்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏற்றமும் அடித்தட்டு மக்களை ஆட்டம் காண வெச்சிருக்கே....

செந்திலின்_கிறுக்கல்கள்

தேர்தல் வந்துட்டா போதும் உடனே கிளம்பி வந்துடுவான்..!

இலவசம்

ச ப் பா ணி

தொழில் நுட்பங்கள் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறது.. ஆனால் மிச்சப்படுத்திய நேரங்களை அவையே ஆக்கிரமித்தும் உள்ளது

balebalu

வர வர வாக்காளர்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போல !

𝕳𝖆𝖗𝖎𝖙𝖍𝖗𝖆𝖓𝖆𝖉𝖍𝖎 𝖗𝖆𝖏𝖆™

அரசியல்வாதிகள் சகாய விலையில் கிடைக்கிறார்கள் ஆனா, சகாயத்துக்குதான் அரசியல் சகாயமாக கிடைப்பதில்லை!

PrabuG

படிச்சு பெரிய அதிகாரியான போலீஸ்காரங்களை விட சினிமா பார்த்து வளர்ந்த ஜார்ஜ் குட்டி அறிவாளியா இருக்காரே..

நாம இப்ப நிறைய படிக்கனுமா இல்லை நிறைய சினிமா பார்க்கனுமா..

தர்மஅடி தர்மலிங்கம்

“அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” – ராஜ்நாத் சிங்!

"நோட்டா" இருப்பதையே மறந்துட்டிங்க போல...

mohanram.ko

அய்யா, தர்மம் பண்ணுங்கைய்யா, ரெண்டு நாள் ஆச்சுங்கைய்யா, என் புல்லட்டுக்கு பெட்ரோல் போட்டு... கொஞ்சம் தர்மம் பண்ணுங்கைய்யா

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வருகிறேன்- சகாயம் IAS

ஆண்டவர் : இது என் டயலாக்ல..?

மயக்குநன்

அதிமுகவைக் காப்பாற்றுவேன் என பிப்.24-ல் விளக்கேற்ற வேண்டும்!- அதிமுகவினருக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் கடிதம்.

எப்படியெல்லாம் 'பல்பு' கொடுக்குறாங்க..!

சங்கரி பாலா

வீட்டில் இட்லியா என்று எரிச்சலுறும் ஆண்கள் ஹோட்டல் சென்றதும் முதலில் இரண்டு இட்லி ஆர்டர் செய்கிறார்கள்...

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

செவ்வாய் 23 பிப் 2021