மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

நினைத்ததை நடத்திய இயக்குநர்... விக்ரம் ரஷ்யா செல்லக் காரணம்!

நினைத்ததை நடத்திய இயக்குநர்... விக்ரம் ரஷ்யா செல்லக் காரணம்!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் ‘கோப்ரா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு படுஜோராக நடந்துவருகிறது. டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படத்தைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிவருகிறது.

விக்ரமுக்கு நாயகியாக கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். வெரைட்டியாக பல கெட்டப்புகளில் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு, கே.எஸ்.ரவிகுமார், இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நினைத்த நாட்களைவிட அதிகமாக நடந்துவருகிறது. எதிர்பார்த்த செலவைவிட அதிகமாவதால் தயாரிப்பு தரப்பில் ஒரு பக்கம் டென்ஷன் என்றாலும், படத்தை முடித்தாக வேண்டும் என்பதால் படத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது படக்குழு.

இறுதியாக, இயக்குநர் கேட்டுக் கொண்டதன்படி, வெளிநாட்டுப் படப்பிடிப்பும் தொடங்குகிறது. ரஷ்யாவில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் விக்ரம். ரஷ்யாவின் மாஸ்கோவில் இன்னும் சில நாட்களுக்குப் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதோடு, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரமுடன் நடிக்கும் ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். அதோடு, கோப்ரா படம் எப்படியும் இந்த சம்மருக்கு வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

செவ்வாய் 23 பிப் 2021