மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 பிப் 2021

இங்கிலாந்து டி20: இந்திய அணியில் மூன்று தமிழக வீரர்கள்!

இங்கிலாந்து டி20: இந்திய அணியில் மூன்று தமிழக வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மூன்று தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 24ஆம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இதே சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது டி20 போட்டி வருகிற 12ஆம் தேதி நடக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இதில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சென்னையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர். காயத்தால் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய மற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி உடல்தகுதியை எட்டிவிட்டதால் அவரும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் கலக்கிய பேட்ஸ்மேன்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஆல்-ரவுண்டர் ராகுல் திவேதியா முதன்முறையாக தேசிய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலியா தொடரின்போது அணியில் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.

இந்த நிலையில்தான் தற்போது முதன்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக இருந்த பொறுமையின் காரணமாக தற்போது அணியில் இடம் பிடித்துள்ளார். “இந்திய அணியில் இடம் பிடித்தது கனவு போன்று உணர்கிறேன்” என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

“இறுதியாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைத்திருப்பது சிறந்தது. குட் லக்’’ என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

“இறுதியாக சூர்யகுமார் யாதவ் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. வாழ்த்துகள், இஷான் கிஷன், ராகுல் தெவாட்டியா ஆகியோர் அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு குட்லக்’’ என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருக்கு இடமில்லை. காயத்தில் இருந்து மீளாத ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை.

டி20 போட்டியின் இந்திய அணியில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட், இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி, அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோர் டி20 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

திங்கள் 22 பிப் 2021