மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 பிப் 2021

சிவகார்த்திகேயனுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ஒரே ஒற்றுமை !

சிவகார்த்திகேயனுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ஒரே ஒற்றுமை !

தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்ற சினிமா கலைஞர்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர்களென்றால் அது சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யா ராஜேஷும்தான். இவர்களின் சினிமா பயணத்தில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்றால் நம்புவீர்களா?

இரண்டு பேருக்குமே சினிமா பயணமென்பது அத்தனை சுலபமாக நடந்துவிடவில்லை. பெரும் நட்சத்திரத்தின் வாரிசாக சினிமாவுக்குள் இருவரும் வரவில்லை. இவர்களின் வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருந்தது என்பதே உண்மை. குறிப்பாக, இருவரின் பயணமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருப்பது ஆச்சரியமான ஒன்று.

சிவகார்த்திகேயனின் முதல் மேடை ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தொடங்கியது. அதுபோல, ஐஸ்வர்யா ராஜேஷின் முதல் மேடை ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் தொடங்கியது. இந்தப் பக்கம் சிவகார்த்திகேயன் ‘ஜோடி நம்பர் 1’ நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டது போல, அந்தப் பக்கம் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் தோன்றினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு, சின்னத்திரையில் மிகப்பெரிய தொகுப்பாளராக பெரிய இடத்தைப் பிடித்தார் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு இருவருமே முயற்சி செய்யும் போதும், முதல் படத்திலேயே பெரிய நட்சத்திரமாகவில்லை. எஸ்.கே.வுக்கு முதல் படம் மெரினா. சின்ன பட்ஜெட்டில் ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, சில படங்களில் ஹீரோவுக்கு நண்பராகவெல்லாம் நடித்தார். அதுபோல, பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி படத்தில் சின்ன ரோலில் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

நடிகராக சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது எதிர் நீச்சல். அதுபோல, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கவனம் ஈர்த்த படம் ‘காக்கா முட்டை’. இதிலும் ஒற்றுமை இருக்கிறது. என்னவென்றால், இரண்டு படத்தையும் தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம்தான் தயாரித்திருந்தது. வாவ்ல..! அதன்பிறகு, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கானா’ படத்தில் நடித்து பெரிய இடத்தைத் தொட்டார் ஐஸ்வர்யா. அதுபோல, தயாரிப்பாளராக முதல் படத்திலேயே பெரிய வெற்றியைப் பெற்றார் எஸ்.கே. அண்ணன் - தங்கையாக இருவரும் இணைந்து நடித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ இருவருக்குமே வசூல் ரீதியாக மிகப்பெரிய பிரேக் கொடுத்தப் படம்.

குறைவான படங்களிலேயே மிகப்பெரிய இடத்தைத் தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த அளவுக்கு என்றால், அடுத்த விஜய்யாக சிவகார்த்திகேயன் வருவார் என்று கோலிவுட் வட்டாரத்தினர் கணிக்கும் அளவுக்கு இவரின் வளர்ச்சி அமைந்திருக்கிறது. அதுபோல, வெளியூர் நாயகிகளுக்கே தமிழில் பெரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என நாயகிகள் இறக்குமதி ஆகிக்கொண்டிருந்த நேரத்தில், தமிழ் பேசும் தமிழ் நடிகையாக, பெர்ஃபார்மராக தனித்து தெரிந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். உதாரணமாக ‘காக்கா முட்டை’ எனும் ஒரு படம் போதும். இப்போது, ஒரே மேடையில் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 22 பிப் 2021