மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 பிப் 2021

பொன்னியின் செல்வனில் இரண்டு வேடங்களில் ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வனில் இரண்டு வேடங்களில் ஐஸ்வர்யா ராய்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. கொரோனாவினால் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் சிரமப்பட்ட படக்குழு, இறுதியாக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியைத் தேர்ந்தெடுத்து கடந்த ஒரு மாத காலமாகப் படப்பிடிப்பை நடத்திவருகிறது.

பாகுபலி படங்களுக்கு செட் போடப்பட்ட இடங்களில் பிரமாண்டமான மூன்று பெரிய செட்களில் படப்பிடிப்பை நடத்திவருகிறார் மணிரத்னம். படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். குறிப்பாக, படத்தில் முக்கிய ரோலில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கிறார்.

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். எந்தெந்த வேடங்களில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகாமல் ரகசியம் காக்கப்பட்டது. இறுதியாக, அந்தத் தகவலையும் சேகரித்துவிட்டோம். பொன்னியின் செல்வனின் வரும் மந்தாகினி தேவி மற்றும் நந்தினி எனும் இரண்டு கேரக்டர்கள்தான் அது. சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், பெரிய பழுவேட்டரையரின் மனைவிதான் நந்தினி. இது நெகட்டிவ் கேரக்டர். இன்னொரு பக்கம், மந்தாகினி கேரக்டர் பாசிட்டிவ் ரோல். இப்படி, ஒரே படத்தில் நேர்மறை ரோலிலும், எதிர்மறை ரோலிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

ஏற்கெனவே, மணிரத்னம் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், மோகன்லால் நடித்த ‘இருவர்’ படத்தில் இரண்டு ரோல்களில் நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராய் என்பது நினைவுக்கூரத்தக்கது. இருவர், குரு, ராவணன் வரிசையில் மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடிக்கும் நான்காவது படமென்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பச்சன் குடும்பத்திலிருந்து இந்தப் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனும் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், திடீரென படத்திலிருந்து விலகிவிட்டதாகச் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.

எப்படியும், மே மாதத்துக்குள் பொன்னியின் செல்வனுக்கானப் படப்பிடிப்பை முடித்துவிட இருக்கிறார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக விரைவிலேயே படம் வெளியாக இருக்கிறது.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஞாயிறு 21 பிப் 2021