மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 பிப் 2021

மோடி ஆட்சி முடியுறவரைக்கும் கேஸ் தட்சணை: அப்டேட் குமாரு

மோடி ஆட்சி முடியுறவரைக்கும் கேஸ் தட்சணை:  அப்டேட் குமாரு

மாசி மாசம் முகூர்த்தத்துக்கு பஞ்சமில்லை. ஆனா மொய் வைக்கதான் முடியலை. இன்னிக்கு கூட ஒரு கல்யாண மண்டபத்துக்கு போயிருந்தேன். பொண்ணு வீட்ல என்ன சீர் செஞ்சிருக்காங்கனு மாப்ளை வீட்ல ஒரு பையனைப் புடுச்சுக் கேட்டேன். ‘பொண்ணோட அப்பா அரசியல்வாதியாம். மோடி ஆட்சி முடியுறவரைக்கும் கேஸ் சிலிண்டர் செலவு தன்னோடதுன்னு சொல்லி இதைத் தவிர வேற எதுவும் சீர் தரமாட்டேன்னு சொல்லிட்டாராம்னு சொன்னான்.

கல்யாணத்துலையும் அரசியல் பண்றாங்கப்பா. நீங்க அப்டேட் பாருங்க

amudu

வீட்டில் குழந்தைகள் இப்போதெல்லாம் டி.வி ரிமோட்டுக்காக சண்டைகள் போடுவதில்லை. இப்பொழுது, மொபைலுக்காக சண்டை போடவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

ஜோக்கர்

ஆரம்பத்தில் பழக கடினமாய் இருந்தாலும், பழக பழகப் பிடித்து விடும்.

பின்பு எவருடனும் பழகக் கூட பிடிக்காது.

"தனிமை"

amudu

அலாரம் வைத்தவரை தவிர, மற்ற அனைவரையும் எழுப்பி விட முடியும் அலாரத்தால்.

சித்ரா தேவி

கறி இல்லாத சண்டே என்பது காதலி கிடைக்காத 90ஸ் கிட்ஸ் வாழ்க்கை போல கொடுமையானது.

நாகராஜ சோழன் MA.MLA

"2014 முதல் தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை தந்துகொண்டிருப்பது பாஜக அரசு தான்" - நிர்மலா சீதாராமன்

திட்டம் எங்க குடுத்தீங்க,? அடித்தட்டு நடுத்தர மக்களுக்கு திண்டாட்டம் தானே குடுத்தீங்க,

PrabuG

விமர்சனம் பார்த்து படத்துக்கு போன காலம் போய் விமர்சனம் பண்ணுவதற்காக படம் பார்க்கும் காலம்.

கோழியின் கிறுக்கல்!!

மாத சமபளக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம்,

சற்றே அதிக மகிழ்ச்சி!!

mohanram.ko

கறிவேப்பிலையை கொசுறா கேட்குற..... வேணும்னா ஒரு கிலோ கறிவேப்பிலை வாங்கினா, தக்காளி கொசுறா தர்றேன்...

மித்ரன்

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை! - மாஃபா பாண்டியராஜன்#

எதிர்கட்சி தலைவர் கிட்ட இருந்து பெட்ரோல்,டீசல் வரியை குறைக்குறது சம்மந்தமான அறிக்கை வரட்டும் அப்பறம் பாருங்க..?!

மயக்குநன்

புதுவை மாநிலத்தில் மக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் அரசை நாராயணசாமி நடத்துவார்!- கே.எஸ்.அழகிரி.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மக்களை அனுமதிக்க மாட்டாங்களே..?!

amudu

பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். -நிர்மலா சீதாராமன்.

நல்ல வேளை, காங்கிரஸ் கட்சி தான் ஆலோசித்து முடிவு செய்யணும் என்று சொல்லாமல் விட்டீங்களே.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 21 பிப் 2021