மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 பிப் 2021

கலைமாமணி பட்டியல்: லீக் ஆன பின்னணி!

கலைமாமணி பட்டியல்: லீக் ஆன பின்னணி!

தமிழக அரசின் 2019 -20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது சினிமா கலைஞர்களுக்கு நேற்று மாலை வழங்கப்பட்டது. சிவகார்த்திகேயன், யோகிபாபு, கெளதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்கள் விருது நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தேவதர்ஷினி, மதுமிதா, சரோஜா தேவி, செளகார் ஜானகி, நடிகர் ராமராஜன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ஐசரி கணேஷ், இயக்குநர் ரவிமரியா, ஜாகுவார் தங்கம், இசையமைப்பாளர் இமான், தினா, பாடகர்கள் சுஜாதா உள்ளிட்ட 130 கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் கலைமாமணி விருது மெடலை அம்மாவின் கழுத்தில் போட்டு அழகும் பார்த்தார் சி.கா.

இந்நிலையில் புதியதொரு தகவல் ஒன்று சிக்கியது. கலைமாமணி விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியல் அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே, லீக் ஆனது நமக்குத் தெரியும். அது எப்படி நடந்ததென விசாரித்தபோது, “கலைமாமணி விருதுகளை பரிந்துரை செய்ய ஒரு கமிட்டி இருக்கிறது. இவர்கள், தங்களுக்கு நெருக்கமானப் பிரபலங்களின் பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல், அந்த பிரபலங்களுக்கே தங்கள் பரிந்துரைத்தது நிஜம்தான் என நிரூபிக்க அந்த பட்டியலை வாட்ஸ் அப்பில் அனுப்பியும் இருக்கிறார்கள். அப்படி லிஸ்ட் வெளியாகி காட்டுத் தீயென பரவியிருக்கிறது. இந்த விஷயத்தினால் அரசு தரப்பு செம கடுப்பாகியிருக்கிறது. மீண்டும் ஒரு லிஸ்ட் தயார் செய்வோமா என கூட பேச்சுவார்த்தை போயிருக்கிறது. அதற்குள் டிவி சேனலில் துவங்கி அனைவரும் அந்த பட்டியலை பகிர்ந்து விட்டதாலும், காலம் கருதியும் பழைய பட்டியலையே அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது”என்கிறார்கள்.

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

ஞாயிறு 21 பிப் 2021