மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

மீண்டும் விஜய் படத்தில் வில்லனாகும் பாலிவுட் நடிகர்!

மீண்டும் விஜய் படத்தில் வில்லனாகும் பாலிவுட் நடிகர்!

விஜய் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படம் ‘விஜய் 65’. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கான முதல்கட்டப் பணிகள் தற்போது நடந்துவருகிறது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் நெல்சன். தற்போது, இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகிறது. படத்திற்கான பணியை முழுமையாக முடித்துவிட்ட நெல்சன், அடுத்ததாக விஜய் 65இல் கவனம் செலுத்துகிறார். இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் நடிக, நடிகைகளை உறுதி செய்யும் பணிகள் தற்போது போய்க் கொண்டிருக்கிறது.

படத்தில் விஜய்க்கு வில்லனாக வித்யூத் ஜமால் ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக கெத்து காட்டியவர் வித்யூத். துப்பாக்கியில் இவரின் நடிப்பு, ஃபிட்னெஸ், ஸ்மார்ட் வில்லத்தனம் பெரிதளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் நடித்த அதே வருடம் அஜித்துடன் ‘பில்லா 2’வில் நடித்திருந்தார். இறுதியாக, தமிழில் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்தார். அதன்பிறகு, முழுக்க பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். இந்நிலையில், மீண்டும் தமிழுக்கு வருகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் இவர் ஹீரோவாக நடித்து வெளியான கமாண்டோ சீரிஸில் வெளியான மூன்று பாகங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஃபிட்னெஸில் ரசிகர்களுக்கு இன்ஸ்பரேஷனாக இருப்பவர் வித்யூத். விஜய் 65இல் இணைவது இன்னும் உறுதியாகவில்லை. பேச்சுவார்த்தை மட்டும் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விஜய்க்கு இந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த மாஸ்டர் படம் பெரியளவில் வசூல் சாதனையைக் குவித்துள்ளது. அதோடு, படமாகவும் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

- தீரன்

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

சனி 20 பிப் 2021