மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

விருப்ப மனு வில்லங்கம்: அப்டேட் குமாரு

விருப்ப மனு வில்லங்கம்:  அப்டேட் குமாரு

பாத்துக்கிட்டே தலையில கைய வச்சிக்கிட்டு சலிச்சுக்கிட்டாரு நம்ம நண்பர் ஒருத்தரு. ஏன்யா என்னாச்சுனு விசாரிச்சேன்.. எல்லா கட்சியும் விருப்ப மனு வாங்கிக்கிட்டு இருக்காங்கனு பேப்பர்ல போட்டிருக்காங்க. ஆனா நானும் ஒரு விருப்ப மனு கொடுத்தேன். அதுக்கு என்னையும் பேப்பர்லயும் போட்டு மானத்தை வாங்கிட்டாங்களேனு சொன்னாரு. விருப்ப மனு கொடுத்ததை பேப்பர்ல போட்டா விளம்பரம்தானய்யா இதுக்கு ஏன் கலங்குறீங்கனு கேட்டேன். நான் விருப்ப மனு கொடுத்தது பக்கத்து வீட்டு பொண்ணுக்கிட்ட, அது பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல மனு கொடுத்துடுச்சு... அப்படினு விருப்ப மனுவுக்கு பின்னாடி இருக்கற வில்லங்கத்தை சொன்னாரு.

நீங்க அப்டேட் பாருங்க

ச ப் பா ணி

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தன

நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதும் சில செகன்டில் ரிசர்வ் விழும் அந்த வேதனை இருக்கே வேதனை

PrabuG

சின்ன வெங்காயம் கால் கிலோ வாங்குனதுக்குல்லாம் பிஸ்னஸ் மேன் ஆஃப் தி இயர் விருது தராங்கய்யா.

கோழியின் கிறுக்கல்!!

அலைப்பேசி உரையாடலின் பொழுது எதிர் தரப்பில் நீண்ட இடைவெளி விட்டால்,

'இன்னும் நீ போனை கட் பண்ணலையா?' என்றுப் பொருள்!!

நாகராஜ சோழன் MA.MLA

பெட்ரோல் விலையை குறைப்பது எங்கள் கையில் இல்லை. - நிர்மலா சீதாராமன்

ஒரு வேளை அம்பானி கைல இருக்குமோ..!?!

சோழ நாட்டு விவசாயி

லவ் பண்றத விட கஷ்டம் லவ் பண்றவனோட ரூம்மெட்டா இருக்கறது...

Bachelors_பரிதாபங்கள்

balebalu

நாளைக்கு என சேமித்து வைக்கப்படும் விஷயத்தில் பணம் மட்டுமல்ல சட்னி, சாம்பாரும் சேர்ந்து கொள்கிறது !

சரவணன். ℳ

மார்ச் 1 ஆம் தேதி தலைவர் திட்டங்களை தொடங்கி வைக்க வர்றாரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா?

செங்கல்லு, திருக்குறளு, ஆத்திச்சூடி பாடலு, எல்லாம் ரெடியா இருக்கு...

எனக்கொரு டவுட்டு ⁉

சிலிண்டர்க்கு மானியம் 25 ரூபாய், சிலிண்டர் டெலிவரி பண்றவனுக்கு இறக்கு கூலி 50 ரூபாய்..

நல்லாருக்குடா உங்க டீலிங்..

பழைய சோறு

ரயிலில் பயணச்சீட்டில்லாமல் பயணிப்பவனின்‌ முகத்தில்

சொந்த ஊரின் தூரம் தெரிகிறது..!

மயக்குநன்

தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்!- மு.க.ஸ்டாலின்.

ஆமா தலைவரே... நீங்க வர்ற நேரமா பார்த்து தேர்தல்தான் வந்துடுது..!

கோழியின் கிறுக்கல்

அம்மாவின் ஆயிரம் அடிகளுக்கு அசராத மனம்,

அப்பாவின் ஒரு முறைப்புக்கு நடுங்க ஆரம்பித்து விடும்!!

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

சனி 20 பிப் 2021